எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லூரி காலத்தில கடற்கர ஓரத்தில கூட்டத்தோடு வந்தவளே ஒன்...

கல்லூரி காலத்தில
கடற்கர ஓரத்தில
கூட்டத்தோடு வந்தவளே
ஒன் கூட்டில்இடம் தந்தவளே
மொகவரி நான் தெரியாம
முழிச்சிகிட்டு நின்னப்போ
கை தூக்கி கூப்டவளே
என் கையொட்டி நடந்தவளே
நான் கண்ட மொதல்
தேவத நீதானு சொல்லனுமோ?

மாமானு கூப்ட என்ன
மறந்துபோன காரண மென்ன
ஏமானு கேட்பதற்குள்
எட்டநீ போன தென்ன?

பிரியா-னு பேரு வச்சி
பிரிஞ்சி என்ன போனப்போ
அறியாத பிஞ்சு நெஞ்சு
அழுத காலம் ஏராளம்
நான் சிரிச்சதில்ல யாராலும்

பன்னிரண்டு பருவம் னாலும்
பரவா யில்ல காத்திருக்கேன்
நீ பிரிஞ்சிபோன காலத்திலும்
நான் குறிஞ்சிபூவா பூத்திருக்கேன்
சாயங்காலம் சாயரதுக்குள்
ஓடி வந்து ஒடிச்சுக்கோடி
ஒன் கூந்தலுல வச்சுக்கோடி

கரை தேடும் கடலலைகள்
கண்டவுடன் ஓடி விடும்
இது தான் வாழ்க்கையென
எடுத்து சொன்ன தேவதயே
மறக்க நீ நெனச்சபோதும்
உன்ன நெனக்கநான் மறந்ததில்ல......

# அன்புத்தோழி Shanmugapriya Kumarக்கு சமர்ப்பணம்

பதிவு : DanielJeff
நாள் : 11-Dec-13, 7:17 pm

மேலே