எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

( மீள் பதிவு .....நினைவுபடுத்துவதற்காக ) உணர்வலைகள் புத்தக...


( மீள் பதிவு .....நினைவுபடுத்துவதற்காக )


உணர்வலைகள் புத்தக வெளியீட்டு விழா

எழுத்து தளத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் ,
மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கும் ,
சகோதர சகோதரிகளுக்கும் ,

வணக்கம் .

நான் இதுவரை இந்த தளத்தில் பதிவிடாமல் உள்ள கவிதைகளையும் சேர்த்து 1000 கவிதைகளுக்கு மேல் எழுதி இருந்தாலும் ( தளத்தில் பதிவானவை 729 ) , இதுவரை எந்த தொகுப்போ , புத்தகமோ வெளியிட்டதில்லை. ஆனால் சமீப காலத்தில் , என் நெருங்கிய நண்பர்களின் தூண்டுதலாலும் , தென்றல் சமூகநல அறக்கட்டளையின் வேண்டுகோளின்படியும் , என் உறவினர்கள் சிலரின் விருப்பத்தை நிறைவேறவும் எண்ணி முதலில் ஒரு தொகுப்பை வெளியிட முடிவு செய்தேன்.

அதன்படி முதல் தொகுப்பாக , சுமார் 160 கவிதைகளை தேர்வு செய்து , " உணர்வலைகள் " எனும் தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிடுகிறேன் .

அதன் அழைப்பிதழைதான் இங்கே பதிவு செய்துள்ளேன் உங்களின் மேலான பார்வைக்கு. இதனயே நான் நேரில் வந்து அழைத்ததாக நினைத்து கொள்ளும்படி பணிவன்போடு கேட்டுகொள்கிறேன்.
நான் பலரிடமும் முகவரியை கேட்டிருந்தேன் . சிலர் மட்டுமே அனுப்பி இருந்தனர். அவர்களுக்கு அழைப்பிதழ் தபாலில் அனுப்பி உள்ளேன். ஆனாலும் எனக்கு என் அழைப்பிதழ் அனைவரின் பார்வைக்கு வர வேண்டும் .... அனைவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் இங்கே நம் தளத்தில் பதிவிட்டேன் .

இன்னும் விழாவிற்கு ஒரு மாதம் இருந்தாலும் , முன்கூட்டியே தெரிவித்தால் அதற்கேற்ப அவரவர் கலந்து கொள்ள முனைவார்கள் என்பதால் இன்று பதிவிட்டேன் . மீண்டும் மீண்டும் பதிவிடுவேன் ,, உங்கள் நினைவில் வரவேண்டும் என்பதற்காக .

" உணர்வலைகள் " நூல் வெளியீட்டு விழா

நடைபெறும் நாள் :

அக்டோபர் 12 , ஞாயிற்றுகிழமை

இடம் :

சர் பிட்டி தியாகராய அரங்கம் , தி நகர் , சென்னை 17

முகவரி :

ஜி என் செட்டி சாலை ( கவியரசர் கண்ணதாசன் சிலை அருகில் )

நேரம்

மாலை 5 மணி முதல் ( சரியாக )

அனைவரும் நிச்சயம் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். நான் அழைப்பிதழை நேரில் வந்து அளிக்காமல் உள்ளதற்கும் , உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக அனுப்ப முடியாமல் போனதற்கும் , என்னை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் . உங்களை அன்புடன் எதிர்நோக்குகிறேன் .

அனைவரும் வருக வருக வருக

என்றும் உங்கள் நண்பன் , சகோதரன் ,

பழனி குமார்

நாள் : 15-Sep-14, 6:51 am

மேலே