-------எழுத்தும் எண்ணங்களும் ----- எழுத்தில் சில அசிங்க ஜந்துக்கள்...
-------எழுத்தும் எண்ணங்களும் -----
எழுத்தில் சில அசிங்க ஜந்துக்கள் நுழைந்து PRIVATE MESSAGE --CHAT BOX
மின் அஞ்சல் உரையாடல் பெட்டி இவைகளில் தவறான தரம் குறைந்த
தாழ்வான வேசியின் இழிவான விரக தொனியில் எழுதுகிறார்கள்
பேசுகிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். இந்த விசித்திர ஜந்துக்களை
அடையாளம் கண்டு அகற்றுவது எழுத்துக்கு தலையாய பொறுப்பு கடமை.
இது வினோதமான புற்று நோய் . புற்று நோய் முற்றினால் நோவையும்
வலியையும் தரும் கடைசியில் சாவையும் தரும் .
இவர்கள்
மரபணுக்களின் திரிபு
மனித குலத்தின் இழிவு.
பெண்பாற் கவிஞர்களுக்கு பரிந்துரை :
இந்த வினோத விந்துச் ஜந்துக்கள் தொந்தரவு செய்தால் நிர்வாகத்தின்
கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்
உங்கள் நட்புப் பட்டியலில் இருந்தால் இவர்களை உடனே நீக்குங்கள்.
உங்கள் வயது மற்ற சுய விவரங்களை இங்கே வெளியிடாதீர்கள் .
இது முக நூலுக்குப் பொருந்தும். இப்பொழுது இங்கும் பொருந்தும் .
பின் மனம் வருந்தி பயனில்லை .
வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் ---வஞ்சித்த
எங்குமுள ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி
அங்கம் குலைவது அறிவு .
---அறிவு பெற்றால் நன்று. இல்லை என்றால் இவர்களைப் பெற்ற தாய் தந்தையர்
வெட்கித் தலை குனியும்படி இவர்கள் இழிவு வாழ்க்கையை வாழ்வார்கள் .
பாதை தவறிய கால்கள்
விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையை
அன்னை பேர் சொல்லி வாழ்வதில்லை.
===எம்ஜியார் பள்ளியில் பாடமாக வைக்க வேண்டும் என்று விரும்பிய
அவரது படப் பாடலின் வரிகள்.
------அன்புடன், கவின் சாரலன்
.