எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில நேரங்களில் நாம் ஒரு சாதாரண விஷயத்தைக்கூட தலையில்...

சில நேரங்களில் நாம் ஒரு சாதாரண விஷயத்தைக்கூட தலையில் வைத்துக்கொண்டாடுவோம். 'மங்கள்யான்' மிக சிறந்த சாதனை (மீடியாக்களுக்கு மிக சிறந்த தீனி). இந்திய விஞ்ஞானிகளுக்கு இது ஒரு பொன் மகுடம்.

ஆனால், உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன், 'இதனால் நாம் அடையும் பயன் தான் என்ன?'

இந்த கேள்விக்கு என் நன்பர்களின் பதில், 'இந்திய மட்டைப்பந்து(கிரிக்கெட்) அணி வெற்றிப்பெற்றால் கொண்டாடுகின்றாய். இது போன்ற சாதனை நமக்கு பெறுமையல்லவா?', 'ஒரு திரைப்படம் எடுக்க 100 கோடி பயன்படுத்தும் பொழுது. ஏன் இந்த சாதனையை கொண்டாடக்கூடாது?', 'பல நாடுகளுக்கு நாம் இனி செயற்க்கைக்கோள்கள் செய்து தரலாம். இதனால் இந்தியாவிற்கு நிறைய வருமானம் கிடைக்கும்.'

முதல் இரண்டு பதில்களை கேட்கும் பொழுது ஒன்று வெளிப்படையாய் தெரிகிறது. ஒரு அரசாங்க செயலும், பொழுதுபோக்கு அம்சமும் சரிசமாகப் பார்க்கப்படுகிறது. இரண்டுக்கு உள்ள வித்தியாசத்தை உணராமலே இருக்கிறோம் என்பது தெளிவாகிறது. நான் விரும்பும் ஒரு விளையாட்டு அணி வெற்றிப்பெற்றால் நிச்சயம் நான் கொண்டாடத்தான் செய்வேன். ஒரு திரைப்படதிற்கு 100 கோடி செலவிடப்படுகிறது என்றால், ஆயிரத்தும் மேற்ப்பட்ட 'பொருளாதார' நிலையில் கீழ் நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கைக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்று பொருள்.

"'மங்கள்யான்' மூலம் 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கும் தான் வாழ்வாதாரம் கிடைக்கிறது?, 400 கோடியில் எவ்வளவு பெரிய சாதனை? இந்திய பொருளாதார நிலையில் இது ஒரு மிக பெரிய சாதனை."

சாதனை தான், சாதனை தான்.

'மங்கள்யான்' மூலம் மட்டும் தான் 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு வாழ்வாதாராம் கிடைக்குமா? இந்திய பொருளாதார நிலையை மனதில் வைத்து தான் கேட்கிறேன், 'இந்தியா ஒரு விவசாய நாடு தானே? 2012-இல் தான் விவசாய பயனுக்காக செயற்க்கைகோள் அனுபப்பட்டது. ஏன் அதுவரை அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை? இவ்வளவு பெரிய விவசாய நாட்டிற்கு, ஒரே ஒரு செயற்க்கோள். சுனாமி அபாயத்தை தெரிந்துக்கொள்ள செயற்க்கைகோள் அனுப்பபட்டதா?, இந்திய பாதுகாப்பு துறைக்கு எத்தனை சொர்ப்ப செயற்க்கோள் மட்டும் இருக்கின்றனவோ? நினைத்தாலே பயமாக இருக்கிறது!'

குறைந்த செலவில் இவ்வளவு பெரிய சாதனை செய்ய முடிந்த விஞ்ஞானிகளை ஏன் மக்களுக்கு பயன் படும் ஒரு சாதனையை செய்ய வாய்ப்பு கொடுக்கபடவில்லை?

மூன்றாவது பதிலை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்த வருமானமெல்லாம் இந்தியர்களுக்கு தான் பயன்படப்போகிறதா?

நான் வழக்கமாக தேனீர் அருந்தும் கடையின் முதலாளி, என்னையும் என் நண்பர்களையும் கேட்கிறார், 'படிச்ச் பசங்க, கேட்டா சொல்லுவாங்க, ஏன்பா மங்கள்யான் வெற்றிக்கரமாப் போய்ட்டு இருக்கே. நமக்கு என்னப்பா பயன்?'. உண்மையிலேயே எங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பின் அவரே கூறுகிறார், 'நான் இன்னும் டீ ஆத்திட்டு தான் இருக்கன்'.

தேனீர் கடை முதலாளிக்கு தெரிக்கிறது. பி.இ. பி.டெக் படித்தவர்களுக்கு ஏன் தெரியவில்லையோ?

மங்கள்யான் ஒரு சிறந்த முயற்சியே தான். ஆனால் பயன்?
'செவ்வாய் கிரத்துக்கு மனிஷன் போவான் இல்ல?' - என்கிறீர்களா?

'ஊருக்கு போக பணமில்ல, ஒரு பத்து ரூபா குடுங்க' - என்கிற மக்கள் கூட்டம் இன்னமும் பேருந்து நிலையங்களில்.
'அவன் எதுக்கு கேக்குறானோ?, அவர்கள் எல்லாருக்கும் நீ முதல உதவி செஞ்சியா?' என்று தான் கேட்கிறீர்கள். நான் செய்தது இல்லை தான். செய்யப்போவதும் இல்லை தான். ஆனால் ஒரு போதும் யாருக்கும் பயன்படாத செலவை செய்துவிடமாட்டேன்.

பதிவு : நிரலன்
நாள் : 2-Oct-14, 12:51 am

மேலே