எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானம் குளிப்பாட்டி காற்று தலை துவட்டி மரங்களும் தன்...

வானம் குளிப்பாட்டி
காற்று தலை துவட்டி
மரங்களும் தன் அழுக்குகளை தொலைத்து
தயாரானது தீப ஒளி திருவிழாவிற்கு...

அறியாமை எனும் இருளை போக்கி
அனைவரின் வாழ்விலும் இன்ப ஒளி தேக்கி
கடந்து செல்ல மீண்டும் வருகிறது அந்த
தீப ஒளி திருவிழா....

இம்முறையாவது
காற்றில் புகையை கொஞ்சம் குறை
உள்ளத்தில் மகிழ்ச்சியை மட்டும் நிறை
காக்கைகளை தூங்க விடு
ஓசோனுக்கு விடுதலை கொடு....

------------------------------------------------------------------------

நான் சென்னையின் புழுதிக்கற்றால் பாழடைந்த என்
நுரையீரலுக்கு என் குமரி காற்றின் மூலம் விடுதலை அளித்து
அம்மாவின் புடவை வாசனை மூலம் புத்துயிர் அளிக்க செல்கிறேன்.....

அனைத்து தோழ ,தோழி ,தோழமைகளுக்கும் என் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்......

பதிவு : ஷர்மா
நாள் : 21-Oct-14, 12:46 pm

மேலே