எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு நண்பர்களே ! ஒருவரை ஒருவர் அறியாத நாம்...

அன்பு நண்பர்களே !
ஒருவரை ஒருவர் அறியாத நாம் இந்த தளத்தில் நண்பர்களாகவும் உடன்பிறபுகளாகவும் ஒரு குடும்பத்தினராக வாழ்ந்து வருகின்றோம் !
இங்கு நம் நட்பை முறிக்கு எதற்கும் நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது !

இன்று தளத்தில் தோழர் செந்தேள் அவர்கள் வருத்தத்துடன் பதிவிட்ட எண்ணம் என்னை பாதித்தது !

நண்பர் அருண்வாலி அவர்கள் பேசிய விதம்
வருத்தம் அளிக்கிறது நண்பர்களே !

நடிகை இரசிப்பதும் இரசிக்காமல் இருப்பதும் அவரவர் சொந்த விருப்பம், அதில் நான் ஒருபோது தலை இடப்போவதில்லை.

ஆனால் நண்பர் அருண்வாலி அவர்களே தாங்கள் பேசி இருக்கும் விதம் அநாகரிகமானது ! அதற்காக நீங்கள் நிச்சயம் நண்பர் செந்தேள் அவர்களிடம் மன்னிப்பு கோரியே ஆகவேண்டும் !

தாங்கள் எந்த மனநிலையில் இருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. தான்கள் இவ்வாறு கூறி இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. குடும்ப அங்கத்தினர்களிடயே அவ்வப்போது கருத்து வேறுபாடுகளால் எழும் சிறு சலசலப்பாடவே நான் இதைக் கருதுகிறேன்.
சிறு பிரச்சனைகள் நம் உறவுகளை பிரித்துவிடக்கூடாது.

தாங்கள் இது என் சொந்த விருப்பம் என்பதை வேறு விதமாக கூறி இருக்கலாம் ! தங்களது பதில் சற்று மன வருத்தத்தை தருகிறது. நம் நட்பு நம் கர்வத்தைவிட பெரியது. தாங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நண்பர் செந்தேள் அவைகளே தாங்களும் மிகவும் மோசமாகவே அவரது படைப்புகளில் கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் !

அவர் செய்தது தவறு என்றால் தாங்கள் பேசியதும் மிகப் பெரிய தவறே !
தங்கள் மீதும் தவறை வைத்துக்கொண்டு அவற்றை மட்டும் குறை சொல்வதில் என்ன ஞாயம் !
முதலில் தங்கள் தவறை ஒத்துக்கொண்டு அவரிடம் மன்னிப்பு கோருங்கள் !

சிறு சச்சரவுகள் நம் உறவுகளை பிரித்துவிடக்கூடாது என்பதற்காகவே இதை கூறுகிறேன்.

தள நண்பர்கள் அனைவருக்குமே இது எனது அன்பான வேண்டுகோள் !

பதிவு : முகில்
நாள் : 22-Oct-14, 10:36 am

மேலே