எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில்...

படித்ததில் பிடித்தது

சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.. ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா....

உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா....

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது....உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தான்...தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்.....சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவிக்கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டான்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை...
உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றார்...

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை (அன்பு) செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்...

பதிவு : தன்சிகா
நாள் : 29-Oct-14, 10:42 pm

மேலே