‘அசை’ எத்தனை வகைப்படும்? 1. நேரசை, 2. நிரையசை....
‘அசை’ எத்தனை வகைப்படும்?
1. நேரசை, 2. நிரையசை.
1. 'நேரசை' என்பது
தனிக் குறில் அல்லது தனி நெடில் மெய்யெழுத்துடன் இணைந்தோ, இணையாமலோ வருவது நேரசை ஆகும்:
எ.கா:
1. 'அ' தனிக் குறில்
2. 'இல்' தனிக் குறிலும் மெய்யும்
3. 'ஆ' தனி நெடில்
4. 'ஆல்' தனி நெடிலும் மெய்யும்.
(இவைகளை ஓரசைச் சீர்கள் எனவும் கொள்ளுதல் வேண்டும்)
2. 'நிரையசை' என்பது
இரு குறில் அல்லது குறில் நெடில் இணைந்து மெய்யெழுத்தோடு சேர்ந்தோ, சேராமலோ வருவது நிரையசையாகும்.
எ.கா:
1. 'அடி' இரு குறில்
2. 'அருள்' இரு குறிலும் மெய்யும்
3. 'அவா' ஒரு குறில் அதன்பின் ஒரு நெடில்
4. 'விடாய்' ஒரு குறில், அதன்பின் நெடில் அதன்பின் ஒரு மெய்.