எமது சமூகத்தில் இருக்கின்ற சீதன முறை அழித்து ஒழிக்கப்படவேண்டும்....
எமது சமூகத்தில் இருக்கின்ற சீதன முறை அழித்து ஒழிக்கப்படவேண்டும்.
நான் ஒரு பெண் என்பதால் !
சீதனம் என்ற வார்த்தையால்
என் வாழ்க்கையை கேவலப்படுத்துகிறார்கள்.
ஆனாலும்
நான் பெருமைப்படுகிறேன்
ஒரு பெண்ணாய் பிறந்ததிற்கு
ஒரு ஆணுக்கு நிகராய்
என்னால் சாதிக்க முடியும்.
எம்மாலும் முடியும் என்கிறபோது
நாம் ஏன் கொடுக்க வேண்டும் சீதனம்
பெண்களே !
விழித்துக்கொள்ளுங்கள் !
சீதன முறையை
இல்லாது செய்ய
நாமும் கேட்போம்
முதலில் ஆண்களிடம் சீதனத்தை
பின்பு முடிவெடுங்கள்
உங்கள் திருமண வாழ்க்கையை