எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மிருகத்தின் குணம் பசியெடுத்தால் பாய்ந்து கடிக்கிது ... எங்கள்...

மிருகத்தின் குணம் பசியெடுத்தால் பாய்ந்து கடிக்கிது ...
எங்கள் நாட்டில் குழந்தைகள் நிலைமை சொல்ல என்மனம் துடிக்கிது....

கட்ட கட்டா பணம் புழங்கும் எங்கள் நாட்டில் ..
சிலர் பதுக்கிவைப்பதால் எங்களுக்கு இந்தநிலைமை எங்கள் நாட்டில் ..

மிருகம் தனக்கு வேண்டியதை தானே தேடிக்கொள்ளும் ...
அதை தனது இனத்தாரோடு பகிர்ந்து உண்ணும்...

எங்களுக்கும் அந்த பழக்கம் கடவுள் கொடுத்த துண்டு ..
ஆனால் ஏழையாக பிறக்கும் வாய்ப்புகளும் இங்கு அதிகம் உண்டு..

எங்களுக்கு வசதியில்லை வருத்தப்பட எதுவுமில்லை ..
அவர்கள் நினைக்காமல் எங்கள் நிலைமை மாறப்போவதில்லை

மனிதனுக்கு மனித குணம் உள்ளவரை கையெந்துவொம்..
எங்கள் பொறுமை மாறும் நிலை வந்தால் பாய்ந்து விடுவோம்..

மனிதர்கள் தான் நாங்களும் மறந்து விடாதீர்கள் ...
மரத்தில் ஏறி எங்களை வாழ வைத்து விடாதீர்கள் ...

மனிதன் வீழ்வது ஒரு முறைதான் என்றும் மறந்து விடாதீர்கள் ...
மரத்தின் கிளையை உடைத்து விட்டு நிழல் இல்லை என்று வருத்த படாதீர்கள்...

நம் சமுதாயத்தை மாற்ற நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்..

தேங்கி கிடக்கும் நீரை திறதுவிட்டால் தான் பலன் தரும் ..
அதை தேக்கி வைத்தால் பின்னாளில் தெறித்து ஓடும் ..

அப்போது அடக்கவும் முடியாது ...
அணை போடவும் முடியாது..

தமிழர்களுக்கும் ...
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் ...

40 மணி நேரம் மீதம் உள்ளது 2014 க்கு...

பதிவு : சாமுவேல்
நாள் : 30-Dec-13, 5:07 am

மேலே