எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதநேய புத்தாண்டு 2015 எல்லோரும் எல்லாமே பெறவேண்டும் இங்கு...

மனிதநேய புத்தாண்டு 2015

எல்லோரும் எல்லாமே பெறவேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்

தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்

தேடும் அன்பில் வேற்றுமையின்றி -நம்
தேசம் ஒன்றே குலவிடுவோம் ....!

தீதும் நன்றும் பிறர்தர வார இதை
தெரிந்தும் இனியும் திருந்திடுவோம் ....!

நாடும் மண்ணும் நமதென எண்ணி
நாளும் பொழுதும் வாழ்ந்திடுவோம் .....!

சாதிமத பேதமில்ல சமதான வாழ்வை
எண்ணியே சந்தோசமாக வாழ்ந்திடுவோம்....!

நாள் : 1-Jan-15, 8:18 am

மேலே