எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உணவில் முதலிடத்தையும், உறக்கத்தில் இரண்டாமிடத்தையும், உடற்பயிற்சியில் கடைசி இடத்தையும்...

உணவில் முதலிடத்தையும், உறக்கத்தில் இரண்டாமிடத்தையும், உடற்பயிற்சியில் கடைசி இடத்தையும் பிடித்து இந்தியர்கள் சாதனை!

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜி.எப்.கே. என்று நுகர்வோர் ஆராய்ச்சி நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் உணவில் முதலிடத்தையும், உறக்கத்தில் இரண்டாமிடத்தையும், உடற்பயிற்சியில் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளின் படி நன்றாக தூங்குவதில் இந்தோனேசியா 85 சதவிகிதத்துடன் முதலிடத்தையும், இந்தியா 77 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தையும், சீனா 73 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. போலந்து நாடு 51 சதவிகிதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது.

சத்தான உணவு எடுத்துக்கொள்வதில் 79 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்தையும், 74 சதவிகிதத்துடன் இந்தோனேசியா 2வது இடத்தையும், 69 சதவிகிதத்துடன் மெக்சிகோ மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜப்பானியர்களில் 29 சதவிகிதம் பேர் மட்டுமே சத்தான உணவு உட்கொள்வது தெரிய வந்துள்ளது. அதனால் தான் ஜப்பானியர்களுக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறதோ?

அதே போல் உடற்பயிற்சி செய்வதில், 68 சதவிகிதத்துடன் மெக்சிகோ முதலிடம் பிடித்துள்ளது. அந்நாட்டில் உள்ளவர்கள் தான் கட்டான உடல் வாகை வைத்துள்ளது ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக 67 சதவிகிதத்துடன் சீனா இரண்டாவது இடத்தையும், 61 சதவிகிதத்துடன் கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் 45 சதவிகிதத்துடன் இந்தியா பதிமூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நமது மக்கள் உணவில் காட்டும் அக்கறையை உடற்பயிற்சியில் காட்டாததால் தான் பேருந்துகளின் இருக்கை அளவை விட உடல் பருமனாகி காணப்படுகிறார்கள். எனவே உணவுக்கும், உறக்கத்துக்கும் காட்டும் அக்கறையை உடற்பயிற்சியிலும் காட்டவேண்டும் என்பது தெரியவந்துள்ளது.

எழுத்து செய்திகள்

நாள் : 7-Jan-15, 1:19 pm

மேலே