எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குடியரசு நாடு குடிமக்களுக்கில்லை வீடு? குடிநீர் தீர நதியை...

குடியரசு நாடு
குடிமக்களுக்கில்லை வீடு?
குடிநீர் தீர நதியை இணைத்தாரா ?
குடிமக்கள் வாழ நல் வழிதான் வகுத்தாரா ?
குடியை பெருக்கி குடிலை மறந்தாரே !
கொடியை ஏற்றி குடியரசென்றால்
குடித்தனம் விளங்குமா ?
குட்டிதூக்கம் போடும் கூட்டம் விழிக்குமா ?
குள்ளநரித்தனம் செய்யும் அரசியல் சாயம் வெளுக்குமா ?
குணமில்லை பணமென்ற இழிநிலை மாறுமா ?
குறட்டை விடும் குடிமக்கள் விழித்தால் விடியும்
கொடியும் கம்பத்தில் ஏறி பட்டொளி வீசி பறக்கும்
அந்நாளே பாட்டாளிகளின் குடியரசாகும் !

நாள் : 26-Jan-15, 2:33 am

மேலே