எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வைத்தான்...


துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க..
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உயிர் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு..
இது கீழ் புரத்தில் இனிப்பு மேல் புரத்தில் கசப்பு..
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு..
இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே......

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட....

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே......

பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு
பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு
தண்ணியிலே மீன் உண்டு
தரையிலே மான் உண்டு
மாத்தி வச்சா தீர்ந்து விடும் கணக்கு...

இப்போ நான் இருக்கும் இருப்பு
நாலு பேரு பொறுப்பு
நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு
ரொம்ப நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு....


பாடல் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.வி.
படம் - ராஜபார்ட் ரங்கதுரை

(தோழி புனிதா வேளாங்கண்ணி அவர்களுக்கு என் நன்றிகள்.)


பதிவு : யாழ்மொழி
நாள் : 27-Jan-15, 12:52 pm

மேலே