எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு...

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.


யாழ்மொழியின் விழிப்பதிர்வோளிப் பாடல்....
என்னவளுக்கு பிடித்தப் பாடல்...
எழுதியவர் என் தகப்பன்....

பதிவு : யாழ்மொழி
நாள் : 28-Jan-15, 11:57 am

மேலே