எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செ . பா .சிவராசனின் "ஒருத்தி ஒருவனுக்கு" நாவல்,...

செ . பா .சிவராசனின் "ஒருத்தி ஒருவனுக்கு" நாவல், கவிஞர் சத்யராஜின் பீச்சி , மற்றும் கவிஞர் முனியசாமியின் இலக்கணம் அறியாக் கவிதை என்னும் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 20-01-2015 அன்று மதியம் 2 மணிக்கு சென்னை புத்தகக் கண்காட்சி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது .

இரு கவிஞர்கள் இணைந்து உருவாக்கிய ஒரு கவிதை நூலினை ( கவிஞர் சத்யராஜின் பீச்சி , மற்றும் கவிஞர் முனியசாமியின் இலக்கணம் அறியாக் கவிதை) தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் செம்மொழிப் போராளி கவிஞர் க .ச. கலையரசன் அவர்கள் வெளியிட ஆன்மீகச் சுடர் ஈ . ஆறுமுகம் அவர்கள் பெற்றுக்கொண்டார். செ . பா .சிவராசனின் "ஒருத்தி ஒருவனுக்கு" நாவலை எழில் இலக்கியப் பேரவையின் தலைவர் திருக்குறள் மாமணி எழில் சோம . பொன்னுசாமி அவர்கள் வெளியிட முதல் பிரதியினை கவிஞர் பழனி குமார் மற்றும் நாகை முகுந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டனர் . இவ் விழாவிற்கு கீதம் பதிப்பகத்தின் உரிமையாளர் ஞானசி முத்துசாமி அவர்களும் கலந்து கொண்டார் . கவிஞர் விஜய் ஆனந்த் -ன் கவித்துவ வரிகளில் வரவேற்புரையுடன் ஆரம்பமான நூல் வெளியீட்டு விழா மாலை 5 மணிக்கு இனிதே நூலாசிரியர்களின் ஏற்புரை மற்றும் கவிஞர் முனியசாமியின் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது.

நாள் : 28-Jan-15, 4:24 pm

மேலே