எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன நியாயம்? மாட்டின் பாலை குடித்து விட்டு -...

என்ன நியாயம்?

மாட்டின் பாலை குடித்து விட்டு - உடலில்
தெம்பதனை பெற்றுவிட்டு
ஏசுகிறோம் நன்றி மறந்து
மாடு கிடா மாடு என்றெல்லாம்

நன்றிக்கு உதாரணம் நாய் - வீட்டுக்கு
காவலன் நாய் என்றெல்லாம் பாராட்டிவிட்டு
ஏசுகிறோம் அதைமறந்து
நாயே வலிசல் நாயே என்றெல்லாம்.

நல்லது செய்வார் பெயரதனை - என்றும்
நன்மை செய்வார் புகழத்தானே
இணையாய் கூற முயன்றிடுவோம்.
இது என்ன நியாயம் சிந்திப்பீர்!

இது மரபு வழியாக வந்தாலும் - நம்
மனித இயல்பு இதுதானோ
நன்றி மறப்பவன் உயர்திணையாம் - பாவம்
பேசா விலங்கினம் அஃறிணையாம்

ஜவ்ஹர்


பதிவு : ஜவ்ஹர்
நாள் : 12-Jan-14, 3:35 pm

மேலே