எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புகையிலை கேன்சரை உருவாக்கும் ஆனா டாஸ்மாக்கோ டான்சரை உருவாக்கும்...

புகையிலை கேன்சரை உருவாக்கும்
ஆனா டாஸ்மாக்கோ டான்சரை உருவாக்கும்

ஆன்ட்ராய்டு போன் வாங்கினதுல இருந்து
வீட்ல போன எங்க வச்சேனு தேடுறதில்ல..
ஏனா.. எப்பவுமே சார்ஜர்ல தான் கிடக்கும்..

ராத்திரியிலெ தனியா தூங்க பயந்தவன் தான்
கல்யாணத்தை கண்டுபிடிச்சிருக்கணும்..

வீதியில 4வது படிக்கிற பையன் அழுதுட்டு இருந்தான்..
ஏன்டா அழுவுறே? எங்க உங்க அம்மானு கேட்டேன்?
எனக்கு அம்மா இல்லைனான்..
எங்க உங்க அப்பானு கேட்டேன்?
எனக்கு அப்பாவும் இல்லைனான்..

ச்ச அழுகு பயலா இருக்கான்..
அப்பா அம்மா இல்லங்குறானேனு வருத்தப்பட்டேன்..

சரி அழாதேடா அங்கிள் உனக்கு
சாக்லேட் வாங்கித்தரனெ.
உன்கூட யாருலாம் இருக்கானு கேட்டேன்?
மம்மியும் டாடியும்னான்..

#எப்படி வளர்த்திருக்கான்க...

தலைல இருக்குற பேனும்
கையில இருக்குற போனும்
நம்மல நிம்மதியா இருக்கவிடாது..

இப்பல்லாம் குடிச்சவனைவிட படிச்சவன் தான் சார்
அதிகம் புலம்புறான்..

1000 ஆண்டுகள் வாழப்போவதில்லை
ஆகவே இந்த நொடி மகிழ்வோம் மகிழ்விப்போம்...

படித்தது வாட்ஸப்பில்

நாள் : 2-Mar-15, 10:16 pm

மேலே