எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அடுப்பிலிருந்த பாத்திரத்தில் வெந்நீர் கொதிக்கிறது. கூடவே கொஞ்சம் சர்க்கரையும்...

அடுப்பிலிருந்த பாத்திரத்தில்
வெந்நீர் கொதிக்கிறது.
கூடவே
கொஞ்சம் சர்க்கரையும்
தேவையான டீத்தூளும்
சேர்த்தாகிவிட்டது.
தேநீர் மணம்........
அறையெங்கும்....விளாசியது

அடுப்பிலிருந்து இறக்குவதற்குமுன்
ஏதோ ஒரு மண(ன)க்குறையில்
ஏலக்காயும் சேர்த்துவிட்டேன்.
பின்பு பசும்பாலும் ஊற்றியதால்
தேநீர் நிறம்
ஓர் இலக்கணத்தை பெற்றாகிவிட்டது.

இப்போது
சுடச்சுட தேநீர் நிறைந்த கோப்பையை
என்னிதழில் பொறுத்தி
சுவைக்க ஆரம்பித்தேன்..

சத்தியமாக எனக்கு
சுவைக்கவே இல்லை........

ஏதோ ஒரு குறை...
தேநீரில் ஏதோ ஒன்று சேரவில்லை.
என்ன அது ............?
என்ன அது......................?

நான் தயாரித்த இந்த தேநீரில்....
அம்மா தயாரித்த தேநீரிலிருக்கும்
அந்த பாசத்தினை கலக்கமுடியவில்லை.


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 14-Mar-15, 10:07 am

மேலே