எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்னும் மிச்சமிருக்கிறது ....!!! ------------------------------------ நினைவுகளின் கிடங்குகளில் மீதமிருக்கும்...

இன்னும் மிச்சமிருக்கிறது ....!!!
------------------------------------
நினைவுகளின் கிடங்குகளில் மீதமிருக்கும்
இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன
அதில் இட்டு நிரப்பப்போகும் மிச்ச நாட்கள்
யாருடையதென்று ...!

என் நம்பிக்கை கரம்
நீட்டியபடியே இருக்கிறது ...அதில்
எந்த அன்பின் விரல் வந்து கோர்க்குமென்று ...!

தூக்கம் போதாமல் சீக்கிரமாய்
விழிக்கும் இரவுகளில் தான்
தொடர்பு அறுந்துவிடாமல் நீள்கிறது
நிறைய கனவுகள் .....!

சிக்கலான முடிச்சுகளைப் போட்டுக்கொடுத்துவிட்டு
சீக்கிரம் அவிழ்த்துக்கொள்
என்று கைகட்டியபடி வேடிக்கை பார்க்கிறது
கவலைகள் ...!

நேற்றைகளிலிருந்து மீண்டு வந்து
நாளைகளைப்பிடிக்க ஓடினாலும்
கைக்கு சிக்காமல் கண்ணாமூச்சி
ஆடுகிறது காலம் ....!

தொலைந்துபோன புன்னகையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
பழைய புகைப்படங்களைப்போல்
இன்னும் மிச்சமிருக்கிறது
காதலும் .... வாழ்க்கையும் ...!!!

பதிவு : தனபால் ச மா
நாள் : 16-Mar-15, 5:01 pm

மேலே