எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெயில் நம்மை வாட்டுகிறது கல் என்னை தடுக்கிவிழ வைத்தது...

வெயில் நம்மை வாட்டுகிறது
கல் என்னை தடுக்கிவிழ வைத்தது
மழையினால் சளி பிடித்துவிட்டது.
தீ என்னை எரித்துவிட்டது.

இப்படி இப்படியாகவே
மற்ற திணைகளின் மீதே
பழிப்போட்டு பழகிவிட்ட நாம்(ன்)

அவ்வப்போது
அவர் வெறுக்கிறார்
இவர் திட்டுகிறார்
அவள் நேசிக்கிறாள்
இவள் வெறுக்கிறாள்
அவன் தோழனாகினான்
இவன் எதிரியானான்.
என மாய உணர்வில்
சிக்கி புலம்புகிறோம்.

நம் எதிரில் இருப்பது
இருப்பவர்கள் யாவரும்
கண்ணாடி போன்றவர்கள்.
நாம் எப்படியோ
அவர்கள் அப்படியாக
தோன்றுகிறார்கள்.

சில நேரத்தில்
புரிவதில்லை, புலம்புகிறோம்.
எல்லாம் புரிந்து
தெளிவதற்குள் முடிந்துவிடுகிறது
இனிய வாழ்க்கை........!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 24-Mar-15, 7:44 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே