எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வில் உபரியாகக் கிடைக்கப்பெற்ற இரண்டாயிரம்...

இந்த ஆண்டுக்கான
சம்பள உயர்வில்
உபரியாகக்
கிடைக்கப்பெற்ற
இரண்டாயிரம் ரூபாய்க்கான
எனது திட்டமிடல்கள்
ஒரு மதுபான விடுதியையோ
பேரங்கள் மறுக்கப்படும்
அதிநவீன ஆடையகங்களையோ
அறை நண்பர்களோடு
சென்று பார்க்கும்
பிரம்மாண்ட மால்களின்
சமீபத்திய திரைப்படத்தையோ
குறி காட்டுகின்றன ......

அறை வாடகை
அதிகரிப்பிலும்
பெட்ரோல் டீசல்
விலை உயர்விலும்
எடுக்கவிருக்கும்
புதிய மாடல்
அலைபேசியின்
EMI பிடுங்கல்களிலும்
எப்படியும் சேர்ந்துகொள்ளும்
இந்த இரண்டாயிரம் ரூபாய்
பின்வரும் மாதங்களில் ....!

ஒரு
பிரத்யேகமான
தேநீர் போல
ஒரு
பிரத்யேகமான
காதலி போல
ஒரு
பிரத்யேகமான
தருணம் போல
எனக்கே எனக்கென்றிருக்கும்
இந்த மாதத்திய
இரண்டாயிரம் ரூபாயை
என்ன செய்வதென
யோசிக்கிறேன் .....

அடுத்த நாள்
தேர்வை வைத்துக்கொண்டு
விளையாடப் போவதா
தொலைகாட்சி பார்ப்பதா
என்று யோசித்துக்கொண்டிருக்கும்
ஒரு சிறுவனை
அவன் முதுகில்
இரண்டு போட்டு
" ஒழுங்கா போய்ப்படி "
என்று காது திருகும்
அவன் தகப்பனைப் போல
எனது
முதுகில் இரண்டு போட்டு
காது திருகி
" நேபாளம் " என்கிறது
என் மனசாட்சி !

https://pmnrf.gov.in

- குருச்சந்திரன்

நாள் : 3-May-15, 8:04 pm

மேலே