தோல்விகளில் அழிவுகளாகவும் வெற்றிகளில் கழிவுகளாகவும் போட்டிகளில் விதிகளாகவும் பொறாமைகளில்...
தோல்விகளில் அழிவுகளாகவும்
வெற்றிகளில் கழிவுகளாகவும்
போட்டிகளில் விதிகளாகவும்
பொறாமைகளில் சதிகளாகவும்
அலங்கரிப்புகளில் வித்தைகளாகவும்
ஆற்றாமைகளில் சொத்தைகளாகவும்
விழிபிதுங்க வழியடைக்கின்றன
ஒப்பீடுகள்....
மொத்தத்திலும் மெருகேறிப்
பறக்கின்றன உருமாறும்
மதிப்பீடுகள்...
-சர் நா