எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வே மாயம் நொடிக்கு நொடி மாறும் காட்சிகள் மறுநொடி...

வாழ்வே மாயம்

நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்
மறுநொடி மர்மம் அவிழ்ப்பவன் யாரோ?

சரியும் தவறும் மாறும் கோண
ங்களாய்.....
விருப்பும் வெறுப்பும் சூழலின் அளவீடுகளாய்........

திருப்பமென நினைக்கையில் படமெடுக்கும் அரவு
தீடிரென வரும் திருப்பத்தில் வாழ்வின் திசைக் காட்டி .......

அறிவின் எல்லை தொட ஆயுள் முடியும்
எட்ட அறிவும் கிட்டக் கனியாய் .....
எட்ட அறிவோ உலக மாயையாய்......



இல்லாதது உள்ளது ......
உள்ளது இல்லை ..........
மாறுபடும் மனங்கள்.............

வாழ்வின் புதிரில் இறப்பே முடிவு........
இறந்தபின் வாழ்வு மீண்டும் புதிராய்........

யார்கொடுத்த வாழ்க்கை யாருக்கும் தெரியாது
கொடுத்ததை எடுத்தவன் எனதேன்றான் ..........

பைத்தியக் காரன் தெளிவாய் சிரிக்கிறான்
சிந்திக்கும் மனிதன் பைத்தியம் ஆகிறான்............



நொடிக்கு நொடி மாறும் கட்சிகள்
மறுநொடி மர்மம் அவிழ்ப்பவன் யாரோ?

மனித மூளையில் ஒரு நொடிக்குள் உண்டாகும் எண்ணங்கள் நொடிக்கு நொடி வேறுப்பட்டவை.......கணக்கில் அடங்காதவை.............இந்த எண்ணங்கள் எங்கோ இருக்கும் ஒரு மனிதரை பற்றியதாகவோ,தனக்கு எதிர்படும் மனிதர் பற்றியதாகவோ .......இயங்கும் ,இயங்கா .......உயிரோ ,சடமோ.....எதை பற்றியதாகவும் இருக்கலாம்...........இவைதான் இந்த நொடியை தீர்மானிக்கக் கூடியது.........இந்த நொடிக்கான மனதின் சூழல் அன்பு,நேசம்,கோபம் ,வெறுப்பு ,பகை, தனிமை ,வெறுமை ......இவைகளை இந்த எண்ணங்களே தீர்மானிக்கின்றன............அடுத்த நொடியே இது மாறவும் கூடும்.....................


சரியும் தவறும் மாறும் கோண
ங்களாய்.....
விருப்பும் வெறுப்பும் சூழலின் அளவீடுகளாய்........


சரி என்று நாம் ஆமோதிக்கின்ற ஒரு மனிதரோ இல்லை நிகழ்வோ
நாம் தவறு என்று வெறுக்கின்ற ஒரு மனிதரோ அல்லது நிகழ்வோ

இன்னொருவரின் கோணத்தில் மாறுபடலாம்................நமக்கே இன்னொரு சூழலில் கருத்தை மாற்றும் படி அமையலாம்...........

நம்முடைய விருப்பும்,வெறுப்பும் சூழ்நிலை பொருத்து மாறுபடும்................

திருப்பமென நினைக்கையில் படமெடுக்கும் அரவு
தீடிரென வரும் திருப்பத்தில் வாழ்வின் திசைக் காட்டி .......

வாழ்வின் முக்கிய திருப்பம் என்று நாம் நினைத்து இருக்கும் பொழுதில் ,பாம்பு படம் எடுப்பது
போன்று திசை மற்றும் பாதையை மாற்றும் சூழல் உண்டாகலாம்.........

சாதாரண ஒரு நாளில் நம் வாழ்வின் முக்கிய திருப்பு முனை அமையலாம்.........அது நம் வாழ்வையே புரட்டிப் போடலாம்............


.அறிவின் எல்லை தொட ஆயுள் முடியும்
எட்டிய அறியும் கிட்டக் கனியாய் ...........
எட்ட அறிவோ உலக மாயையாய்.........

உலகின் மொத்த அறிவையும் படித்த விடலாம் என்றால் அது யாராலும் முடியாது.........எவ்வளவு முயற்சி செய்தாலும் இயலாது.............இன்னும் மனித அறிவிற்கு எட்டதோ உலகின் மாயைகளாய்..........

யார்கொடுத்த வாழ்க்கை யாருக்கும் தெரியாது ......
கொடுத்ததை எடுத்தவன் எனதேன்றான்..........

நம்முடைய செய்கைகள் பண்புகள் குணங்கள் ...........நடை,சிரிப்பு ,பேசும் விதம் கண் ,மூக்கு ,வாய் என ஒவ்வொன்றும் நம் முன்னோர்கள் யாரிடம் இருந்து கிடைக்க பெற்றதோ யாருக்கும் தெரியாது.........

அனுபவிக்கின்ற வீடு,கார்,பொருள்கள் உண்ணுகிற உணவு யாரால் உண்டாக்கப் பட்டதோ இந்த நொடி இது எனக்கான பொருள் என்று உரிமை கொண்டாடுகிறோம்............


பதிவு : gowthami
நாள் : 18-May-15, 12:11 pm

மேலே