தலைப்பு: வானொலியும் நானும் என் தோழனுக்கு , தனிமையில்...
தலைப்பு: வானொலியும் நானும்
என் தோழனுக்கு ,
தனிமையில் இருந்தேன், தோழனாய் குரல் கொடுத்தாய்!
கவலையில் இருந்தேன்,
உன் கடி நகைச்சுவையில் கலங்க வைத்தாய் !
தோல்வியில் இருந்தேன்,
உன் இசையில் எழுச்சி ஊட்டினாய் !
வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன்,
உன் சேவையில் சேர வாய்ப்பு அளித்தாய் !
மன வருத்தம் கொண்டு இருந்தேன்,
மெல்லிசை கொண்டு வருடினாய் !
வானில் இருக்கும் சூரியன் கூட,
இரவில் ஓய்வு எடுக்கிறது .
நீயோ ! பகல், இரவு ,விடுமுறை ,சோர்வு இன்றி ,
எங்கள் செவிகளை என்றும் தவறாமல் அடைகிறாய் !
தொகுப்பாளர்கள் உனது தூண்கள் !--அவர்களை கொண்டு
வாழ்த்து, விருப்பம், திறமை , நகைச்சுவை, எழுச்சி, கிண்டல்,சமையல்,அழகு குறிப்பு என அறுசுவைகளை தாண்டிய சுவையை தருகிறாய் !
நிமிர்ந்து நிற்கிறாய் !
பொழுது போக்கையும் தாண்டி ,
" பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு ! "
என நண்பனாய் கலந்திட்டாய் !
கேட்டோம் , கேட்கின்றோம் ,கேட்போம்,
உன் குரலை என்றும் .
உன் சேவை என்றும்
எங்கள் செவிகளுக்கு தேவை !
வளரட்டும் சூரியன் FM என்றும்,வாழட்டும் சமுதாயம்!
என் வாழ்வில் உன் பங்கு " நட்பு " !
குறிப்பு :
உன்னை பற்றியும் , என்னை பற்றியும் எழுத இந்த காகிதம் போதாது , ஏனெனில் ,நீ வரைபடம் அல்ல , வரையறுக்க ....
நீ முடிவிலி !