எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி வணக்கம்...

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

வணக்கம் நண்பர்களே ..
இதுவரை 56 படைப்புகள் வந்திருக்கிறது .பெரும்பாலும் ஒரு கவிதைக்கான தளத்தில் இத்துனை கட்டுரைகள் வந்திருப்பதே மகிழ்ச்சி தரும் விஷயம்.

அதுவும் திறனாய்வு குறித்த படைப்புகள் எனும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி .

அதுவும் சிறுகதை வாசிப்பு ..அதுவும் அபி கதைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம் .

சற்று நேரம் முன்பு ஆதியின் ( ஆதவன் தீட்சண்யா ) கவிதை ஒன்றை இங்கே கண்டேன் .அவர் வரிகளையே கடன் வாங்கி சொல்கிறேன் ..ஜெயமோகன்கள் தாரசுகள் தூக்கி விட்ட தமிழ் இலக்கிய கடைகளில் இந்த கடனை வாங்குவது அவசியமாகவும் படுகிறது .
.
// இலக்கியத்தின் மீது புனிதக்கலவையை பூசி மெழுகுகிற கொத்தனார்கள் சிலபேர்
என்னிடம் "ஆண்ட்டி லிட்டரேச்சர் டோன்" இருப்பதாக குற்றம் சாட்டுவதுண்டு.
என்னையும் என் மக்களையும் பொருட்படுத்தாமல் எழுதப்பட்ட எழுதப்படுகிற
குப்பைகளை அவர்கள் இலக்கியம் என்று கொண்டாடுவார்களேயானால் அந்த
இலக்கியத்திற்கு எதிராக நான் செயல் படுகிறவன்தான் // - ஆதவன் தீட்சன்யா

அப்படி செயல் படுகிறவரே அபி ...

இன்று தலைகளையும் , தளபதிகளையும் கலங்கடிக்கிறானே ஒருவன் ... படம் முடிந்து அவன் பெயர் போடும் போது ஒரு இருக்கை விடாமல் எழுந்து கை தட்டுகிறதே .... அந்த மணிகண்டன் ..இட்ட காக்கா முட்டை...

ஏறாத்தாழ அப்படி பட்டவையே அபி கதைகள் ...

ஏற்கனவே அறிவித்தது போல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் திறனாய்வுகள் பொள்ளாச்சி அபியின் சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெறும்.

மற்றுமொரு பகிர்வு என்னவெனில் ...இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் மொத்த படைப்புகளுக்கும் அபி வாசகர் வட்டம் சிறப்பு பரிசு அளிக்க உவகையோடு முன் வந்திருக்கிறது .இந்த அறிவிப்பை பகிர்வதில் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன் .
(இந்திய ருபாய் ஐநூறு மதிப்புள்ள கவிதைகள் , திறனாய்வுகள் புத்தகம் வழங்கப் படும் இறுதி சுற்றுக்கு வந்த படைப்புகளுக்கு .இயன்றவரை உங்களுக்கு பிடித்த நூல்களை அளிக்க முயற்சிப்போம் )

இவை அனைத்துமே தங்கள் படைப்புகளுக்கும் , ஊக்கத்துக்கும் ஈடாகாது.
இருப்பினும் இதை உங்கள் திறனாய்வுக்கு பொள்ளாச்சி அபி வாசகர் வட்டம் அளிக்கும் பெருமதிப்பின் ஒரு சிறிய அடையாளாமாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறோம் .

இன்னும் இரண்டு நாட்களே உள்ளன ..நாளை மறு தினம் இரவு பனிரெண்டு மணிக்கு போட்டி முடிவடைகிறது .அதவாது 14/06/2015 , ஞாயிற்று கிழமை அன்று .

வாருங்கள் ..மேலும் பதியுங்கள் .
இதன் மூலமாக நல்ல திறனாய்வு திறன்களையும் , நல்ல சிறுகதை வாசிப்பையும் , அதன் மூலம் கற்றலையும் , கற்பித்தலையும் சமூகத்துக்கு அளியுங்கள் ...

மிக்க நன்றி

நேசங்களுடன்

அபி வாசகர் வட்டம்


நாள் : 12-Jun-15, 3:12 pm

மேலே