எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதிஇல்லை யப்பா........... பட்டிக் காட்டு பய அவன் -...

சாதிஇல்லை யப்பா...........

பட்டிக் காட்டு பய அவன் - அந்த
பறையன் வீடோ சேரியில
பத்து பாத்திரம் அவன் தொட்டலோ தீட்டு
குளிக்கிற குளம் ,கும்பிடும் ஆத்தா
ஒன்னா இருந்தா குத்தம்,குத்தம்
அறிவேன் நான் -ஆனாலும் சொல்வேன்
சாதி இல்லை யப்பா..............

பட்டம் வாங்க பட்டணம் வந்தான்-அங்கேயும்
ரெண்டு குரூப்பா பிரிஞ்சு நிக்குது
bc ,sc ன்னு உளறித் தொலைக்குது
சண்ட போட்டு சட்டையும் கிழியும்
ஆனாலும் சொல்வேன் நான்
சாதி ஒன்னும் இல்லை யப்பா.........

அடிச்சி ,பிடிச்சி வேலைக்கு வந்தான்
அதிலேயும் பாரு மேல் அதிகாரி அவன் சாதி இல்லை
சாதியால் சதி அங்கேயும் அரங்கம்
இப்போதும் இவன் டிபன் ;பாக்ஸ் யாரும் தொட்டதில்லை
தெரியும் எனக்கு -ஆனாலும் சொல்வேன்
சாதி அது out -dated ..........

ஆசைப்பட்ட பொண்ணு கூட
வாழ மட்டும் ஆச வச்சான்
ஊரே தீக்குளிக்கும் -அதில்
அவன் சாதி மட்டும் உயிர் இழக்கும்
ஆனாலும் சொல்வேன்
சாதி அது இல்லையப்பா ..........சொல்லாதப்பா..........


என்ன அரிப்பு என் முதுகில்
தடவி பார்த்தால் பூணுலு
யப்பப்பா..............யப்பப்பப்பா...................
சாதி இல்லையப்பா............



நடப்பு நிகழ்வுகள் ;

குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடக்கம்

தென்காசி வீதிகளில் சாரல்

பதிவு : gowthami
நாள் : 19-Jun-15, 12:27 pm

மேலே