எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்த...

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்த குமார் - சாந்தி தம்பதியின் மகன் லோகநாதன், 17. இவர், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்; பொதுத்தேர்வில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதை தொடர்ந்து, கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக்., பள்ளியில், பிளஸ் 2 இலவசமாக முடித்தார்.
பிளஸ் 2 தேர்வில், 1,080 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், இன்ஜினியரிங், கட் - ஆப், மதிப்பெண்ணாக, 192 பெற்றுள்ளார். அதன் மூலம்,மேற்படிப்பு படிக்க மாணவர் விரும்புகிறார்.
இந்நிலையில், உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவரது தந்தை குமார், கடந்த மாதம், திடீரென இறந்தார். இதனால், ஏழை

குடும்பத்தில் பிறந்த மாணவரின் இன்ஜினியரிங் கனவு, நிதி உதவி இல்லாததால் கேள்விக்குறியாகி உள்ளது.தந்தை இறந்ததால், வேறுவழியின்றி, மாணவர் லோகநாதன், அப்பகுதியில் உள்ள பிரின்டிங் பிரஸ் ஒன்றில், கூலி வேலைக்கு செல்கிறார். இந்த மாணவருக்கு, ஜூலை, 5ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் லோகநாதன் கூறியதாவது:என் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று, என்னை படிக்க வைத்தனர். நானும், 10ம் வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெற்றதால், காந்தி மெட்ரிக்., பள்ளி நிர்வாகத்தினர், இலவசமாக சேர்த்து படிக்க வைத்தனர். அதன் மூலம், இன்ஜினியரிங், கட் - ஆப் 192 மதிப்பெண்கள் பெற முடிந்தது. பி.இ., மெக்கானிக்கல் படிப்பு முடிக்க வேண்டும்
என்பது என் ஆசை. ஆனால், ஏழ்மை காரணமாக அந்த கனவும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. உடல்நிலை சரியில்லாமல், என் தந்தை இறந்தது, எனக்கு பெரும் இழப்பாக உள்ளது. தாயார் சாந்தி சமையல் வேலைக்கு செல்கிறார். குறைந்த வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். உதவும் உள்ளங்கள் யாராவது உதவி செய்தால், என் மேற்
படிப்புக்கு பேருதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

உதவும் எண்ணம் உள்ளவர்கள், கே.லோகநாதன், த/பெ. குமார், 3/2ஏ, பாவடித்தெரு, நம்பர், 5, திருச்செங்கோடு -- 637 211, நாமக்கல் மாவட்டம், என்ற முகவரியிலோ அல்லது 95789 65759 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

பதிவு : lathaponnarivu
நாள் : 29-Jun-15, 12:33 pm

மேலே