எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழுகுதான் அஸ்திவாரம் அழுகுதான் அஸ்திவாரம் அன்பே - உன்...

அழுகுதான் அஸ்திவாரம்
அழுகுதான் அஸ்திவாரம்

அன்பே - உன்
அழகுதான் காதலின் அஸ்திவாரம்!
என் கவிதைகள் தான்
அதன் மூலதனம்!
==================
என்னை
காதலில் விழவைத்த- உன்
முதல் பார்வைக்கு 'விழா'
எடுக்க போகிறேன் என் இதயத்தில்....
======================
உன் புருவங்கள் நீளத்தில் கூட
நான் பயணம் செய்ய விரும்புகிறேன்
காதல் ரசனையில் - உன்
காது மடல்கள் கூட என்னை
காணிக்கை இட சொல்கிறது கண் மணியே!
===========================
உன் மவுனம் எனக்காக எனும் போது
என் மறு ஜென்மம் உணர்கிறேன் !
உன் இதழில் என் இருப்பிடம் எனும் போது
என் சொர்க்கத்தின் பதிவு சீட்டினை காண்கிறேன்!
============================
உன் சுவாசத்தில் O2&me2
மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்காக
தென்றலை கூட நான் சுவாசித்த
பின்பு உன் நாசிக்கு அனுப்புகிறேன்
நேசித்த உனக்காக .................
===========================
மொத்தத்தில் -நீ
மதி முகம் அல்ல, ரசனைக்காக
படைக்கப்பட்ட ரதி முகம்!
அதன் முதல் ரசிகன் நான்,
முதல் கவிஞனும் நான்தான்...........
==========================
நீ என் அருகில் அமரும்போது
ஆயிரம் குதிரைகள் -என்
இதயத்தை இழுப்பதை உணர்கிறேன்!
அதற்கு என்ன தீனி இடபோகிறாய்..........
============================
உன் கை விரல் நகத்தில் கூட
என் பெயர் எழுத போகிறேன்
ஏனென்றால் - நீ
வெட்டிய பிறகும் என் முகவரி
வந்து சேரவேண்டும் என்பதற்காக.........
========================
போர் முறை தவறி,
நிராயுதபாணி யான என்னிடம்
விழி யுத்தம் முடித்து
விரல் யுத்தம் செய்கிறாய்!
ஆனால், இறந்தவனை உயிர்பிக்கும்
யுத்தம் போல் அல்லவா இது - என்
உடலின் ஒவ்வொரு அணுவிலும்
உயிரூட்டியது உன் விரல்கள் ...................
======================
அடைமழை போல் என்னை
வாட்டியது உன் அழகு இடை!
மூச்சு காற்றும் முத்தெடுக்கும்
ஆழம் செல்லும், உன் இடை தொட்டால்.............
=============================
இப்படி - உன்
அழகை சொல்ல என் கவிதை
நீண்டு கொண்டே செல்கிறது ,
நீளும் கவிதையின்
நிழல் நான்,நிஜம் நீ!
உன்னை முழுவதுமாக நான் வர்ணிக்க
விரும்பவில்லை ....காரணம்
நான் கவிஞன் மட்டுமல்ல -------உன் காதலனும் கூட ..........
==============================
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

பதிவு : மனிமுருகன்
நாள் : 14-Jul-15, 8:16 pm

மேலே