எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய பேருந்து பயணத்தில் கண்ட ஓர் நிகழ்வு உங்கள்...

இன்றைய பேருந்து பயணத்தில் கண்ட ஓர் நிகழ்வு உங்கள் வாசிப்பிற்கு...அநேகமாய் அந்த பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கலாம்.யாரயோ கவனித்தவள் போல் நெரிசலில் முன்னேறி வந்தாள். முன் இருக்கையில் அமர்ந்திருந்த தோராயமாக ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணியை கண்டு புன்னகைத்து "மிஸ்!எப்படி இருக்கீங்க?" பதிலாக ஒற்றை புன்னகை வந்தது. பிறகு தான் படிக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு குறித்து கூறி விட்டு தன் நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்று விட்டாள்.பின் அந்த ஆசிரியையின் அருகில் இருந்த தன் சக தோழியுடனான் உரையாடல் இதோ:"உங்கக்கிட்ட படிச்ச பொன்னுங்களா?""ஆமாங்க.கொஞ்சமாச்சு மரியாதை இருக்கா பாருங்க...என்னய பாத்து எப்படி இருக்கன்னு கேக்கறா..நா எப்படி இருந்தா இவளுக்கு என்னங்க??"...இதில் மரியாதை குறைவு இருக்கிறதென்பது புரியவில்லை.:(

பதிவு : Yuvabarathi
நாள் : 22-Jul-15, 10:09 pm

மேலே