எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

TASMAC தொடரட்டும்! அரசுக்கு ஒரு ஆசிரியனின் ஆலோசனை! அனைத்து...

TASMAC தொடரட்டும்!
அரசுக்கு ஒரு ஆசிரியனின்
ஆலோசனை!
அனைத்து டாஸ்மாக் கடைகளையும்
நூலகங்களாக மாற்றிவிடுங்கள்.
அலமாரிகள் வாங்க வேண்டியதில்லை.
நிர்வாகியை நூலகராக ஆக்கிவிட
வேண்டியது. குளிர்சாதனப் பெட்டியை
பதனீர் வைக்கப் பயன்படுத்திக்
கொள்ளலாம். புத்தகவரி (Book Tax)
என்ற புதியவரியை அரசு விதித்து
அதன் மூலம் புத்தகங்களை வாங்கிக்
கொள்ளலாம். அந்தந்தப் பகுதி
ஆசிரியர்கள் வாரத்திற்கு ஐந்து மணி
நேரமாவது நூலகத்தில் செலவிட
வேண்டுமென்று உத்தரவிடலாம்.
படி. படிப்பு வீட்டுக்கும் நாட்டுக்கும்
பலம,
என்று அதே பச்சைப்பலகையில்
எழுதட்டும்.
TASMAC ( TAmilnadu State Mass
Accessible Center) என்று
மாற்றுங்கள்!
TASMAC தொடரட்டும்!!


--திரு.அலெக்ஸ் பால் மேனன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து....

பதிவு : துரைவாணன்
நாள் : 17-Aug-15, 12:49 pm

மேலே