எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சச்சின் தயாரிக்கும் ஆல்பத்துக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான் நட்சத்திர...

சச்சின் தயாரிக்கும் ஆல்பத்துக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலகம் முழுவதும் உள்ள பிரபல விளையாட்டு வீரர்களை பற்றிய இசை ஆல்பம் ஒன்றை தயாரிக்கிறார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சமீபத்தில் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சச்சின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் உள்ள ரகுமானின் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்தார். ரகுமானின் தாயார் அவரை வரவேற்று உபசரித்தார்.

பின்னர் இருவரும் ரகுமானின் ஸ்டூடியோவுக்குச் சென்றனர். அங்கு ரகுமான் தான் இசை அமைக்கும் முறைகள் பற்றி ரகுமானுக்கு செயல் விளக்கமாக காட்டினார். பின்னர் இருவரும் விளையாட்டு இசை ஆல்பம் குறித்து பேசினர். சுமார் இரண்டு மணி நேரம் ரகுமானுடன் செலவிட்ட சச்சின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நாள் : 25-Aug-15, 9:28 am

மேலே