எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்யாண்ஜீ கவிதை """""""""""""""""""""""""""""""" லாரி துப்பின உடம்புடன் ரத்தப்...

கல்யாண்ஜீ கவிதை

""""""""""""""""""""""""""""""""
லாரி துப்பின உடம்புடன்
ரத்தப் பட்டாணிகள் சிதற
நாய் கிடந்தது
நசுங்கி.

சாராயக் கடைக்குள்
நுழையும் ஒரு ஆள்
திரும்பிப் பார்த்து
உள்ளே போனார்.

படம் போட்டு விட்ட
அவசரத்தில்
வேர்க்கடலை வாங்கி
இடுப்புக்குழந்தையுடன்
இரண்டு பேர் ஓட
தெருவிளக்கு வெளிச்சத்தில்
உப்பின வயிறுடன்
நாய்
ஓரமாய் கிடந்தது
இரண்டாம் நாள்.

இன்றைக்கும் அங்கேயே
இன்னும் கிடப்பதால்
நர்சரிக் குரலில்
குழந்தைகள் சொல்ல

சாப்பிட்டுவிட்டு அதைப்
பேசச் சொல்லி
நாகரிகம் கற்றுத் தருவாள்
அம்மா.

நாற்றத்துக்கு மூக்கை மறைத்து
எதிர்த்த வரிசையில்
நான்காம் நாள் காலையில்
ஓரமாய்ப் போனேன்
அதையும் தாண்டி
அப்புறம் போக
எனக்கும் சின்ன
வேலை இருந்ததால்.

பதிவு : நிலாகண்ணன்
நாள் : 23-Sep-15, 10:18 am

மேலே