எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புன்னகை : அன்போடு சிரிப்பவன் நண்பன்! எப்பொழுதும் சிரிப்பவன்...

புன்னகை :

அன்போடு சிரிப்பவன் நண்பன்!
எப்பொழுதும் சிரிப்பவன் கோமாளி!
காணாமல் சிரிப்பவன் கஞ்சன்!
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்!
கோபத்தில் சிரிப்பவன் கொலையாளி!
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்!
நீதியோடு சிரிப்பவன் அறிஞன்!
நிலைமறந்து சிரிப்பவன் காதலன்!
நின்று சிரிப்பவன் நிலையுள்ளன்!
மகிமையில் சிரிப்பவன் சமர்த்தன்!
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி!
கொடுமையில் சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்!
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்!

குறிப்பு : படித்தேன் .. பிடித்தேன்.. கொடுத்தேன்.

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 22-Feb-14, 8:22 pm

மேலே