எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

20.10.15-விடுதலை நாளிதழில் வந்த செய்தி ================================= ஈரோடு தமிழன்பன்...

20.10.15-விடுதலை நாளிதழில் வந்த செய்தி 
=================================
ஈரோடு தமிழன்பன் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ’திசை கடக்கும் சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா’

ஈரோடு தமிழன்பன் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ’திசை கடக்கும் சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா’ புரட்சியின் பூபாளம் ஈரோடு தமிழன்பன்’ தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு

சென்னை, அக்.20_கவிஞர் ஈரோடு தமிழன்பன் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை மயி லாப்பூர் சி.அய்.டி. குடியிருப்பு பகுதியிலுள்ள கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கில் 18.10.2015 அன்று மாலை நடைபெற்றது.

கவிமுகில் அறக்கட்டளை, விழிகள் பதிப்பகம், புதுச்சேரி இணையதளப் படைப்பாளிகள் பேரவை ஆகிய அமைப்புகள் சார்பில் ஈரோடு தமிழன்பன் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடத்தப்பெற்றது. விழாவில் தமிழறிஞர்கள் ஏராளமானவர்கள் குவிந்தார்கள்.

விழாவுக்குத் தலைமையேற்ற திமுக பொதுச்செய லாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் ஈரோடு தமிழன்பன் எழுதிய ’திசைகடக்கும் சிறகுகள்’ நூலை வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

விழாவில், மேலும் தி.அமிர்தகணேசன் எழுதிய ‘தொலைந்துபோன வானவில்’, கோவை கவிஜி, தாகு எழுதிய ‘மழையும், மழலையும்!’, கனடா கோனீ சுவரிபட் குணரஞ்சன் எழுதிய ‘கனவோடு புதைந்த வர்கள்’, பழனிக்குமார் எழுதிய ‘நிலவோடு ஓர் உரையாடல்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.



உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன், சி.மகேந்திரன், கவிஞர் இன்குலாப், மருத்துவர் சொக்கலிங்கம், மற்றும் கவிஞர்கள் பழனிபாரதி, சொற்கோ, தமிழமுதன், கவிமுகில், தி.அமிர்தகணேசன், பேராசிரியர் இரா. குருநாதன், விழிகள் நடராசன் உள்பட பலரும் விழா வில் பங்கேற்று வாழ்த்துரை ஆற்றினார்கள்.

பல்துறை வல்லுநர்களுக்கு ’தமிழன்பன் விருது’களை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஈரோடு தமிழன்பன் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
ஈரோடு தமிழன்பனைப் பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து கழக வெளியீடுகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரை யாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்பதை எடுத்துக்காட்டக்கூடிய வகையிலே அதே துறையைச் சார்ந்த நண்பர்கள் இதோ ஒரு மகாகவி என்று சொல் லக்கூடிய அளவுக்கு உயர்ந்து, இன்றைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய எங்கள் புரட்சியின் பூபாளம் மட்டுமல்ல,

புரட்சிக்கு மிகப்பெரிய அளவுக்கு ஓர் எரிமலையை கக்கக் கூடியதைப்போன்று எழுத்துகளை வடிவமைத்து ஒரு புதிய சமுதாயத்தை, பழையதைப் புரட்டிப்போட்ட ஒரு புதிய சமு தாயத்தை தம் வாழ்நாளில் மிகப்பெரிய பகுதியை இங்கு செலவழித்துள்ளவர். உற்சாகத்தோடு பணியாற்றுவதற்கு ஊக்கப்படுத்துகின்ற விழாவாக ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் விழா நடை பெறுகிறது. இங்கே ஓர் இலக்கிய சந்தையே இருக்கிறது.

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவள் அணிந்திராத அணி பெரியார் என்று புரட்சிக்கவிஞர் குறிப்பிடுவார். ஊரோடு போவதற்கு எதுவும் தேவை இல்லை. ஆனால், ஈரோடு போவதற்கு துணிவு, கொள்கை தேவை. புதிய சுருதியில் பூபாளம் பாடியவர். ஈரோடு பெயரில் மட்டுமல்ல. அவர் மூச்சில் உள்ளது.

பெரியார் தொண்டர்கள் அவரைப் பாராட்ட அல்ல, நன்றி கூறவே வந்துள்ளோம். அவர் பிறந்த ஊர் சென்னிமலை என்றாலும் கொள்கையால் அவர் ஈரோட்டுக்காரர். தொலைக்காட்சி செய்தி வாசிப் பாளராக செய்திகள் நிறைவடைந்தன என்று நிறைவைத் தந்தவர்.

அவர் கவிதையில் குறிப்பிடும்போது, உயர் ஜாதி யான் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால், உச்சநீதிமன்ற நாற்காலி துடைக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் கழிப்பிடம் ஒன்று கட்டப்படுகிறது என்று பேனாவை சாட்டையாக சுழற்றுபவர். மனுதர்மம் கூறுவதை தம்முடைய கவி தைகளில் எடுத்துக்காட்டியவர் ஈரோடு தமிழன்பன் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப் பிட்டார

தோழர் சந்தோஷ் தந்துதவிய  தகவலுக்கு நன்றி. 
அன்புடன் பொள்ளாச்சி அபி 
--------------------------------------------------------------------



நாள் : 21-Oct-15, 1:11 pm

மேலே