எங்கு இறங்குவாள் என்று தெரியாது எதிரில் உட்கார்ந்திருந்தாள் அவளிடம்...
எங்கு இறங்குவாள்
என்று தெரியாது
எதிரில் உட்கார்ந்திருந்தாள்
அவளிடம் கொஞ்சம்
தண்ணீர் கேட்க நினைத்து
கேட்காமலேயே
கண்ணயர்ந்துவிட்டேன்
விழித்தபோது
அவள் இல்லை
இருந்தது
ஒரு தண்ணீர்பாட்டில்
-#பழநிபாரதி (ரயிலில் வந்த கவிதைகள்)