எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

“காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம் - ஓர்...

“காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம் - ஓர் ஆய்வு” (ஏரி, குளம், குட்டை)

இந்த ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு குழு மூலம் வழங்கப்பட்ட ‘காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலையைப் புரிந்துகொள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் ‘மனித தலையீடுகளினால், தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலையில் ஏற்படும் விளைவு’ என்னும் துணை கருப்பொருளை தேர்வு செய்து, அதன் அடிப்படையில்  நீர்வளத்தை தக்க வைத்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வினை மேற்கொண்டோம்.  

எங்கள் ஆய்வுத் தலைப்பான “காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம் - ஓர் ஆய்வு” (ஏரி, குளம், குட்டை) என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு நெட்டேரி-தேவராஜபுரம், கீழ்அம்பி, 214 கோவிந்தவாடி அகரம்பூர், கூரம், 22 சிறுகாவேரிப்பாக்கம், விநாயகபுரம், முகாம்பிகை நகர், ஒலிமுகமதுபேட்டை (காஞ்சிபுரம்) ஆகிய பகுதிகளை தேர்வு செய்து ஆய்வினை தொடர்ந்தோம்.  

முதல்கட்டமாக மக்களிடம் தகவல் சேகரிக்கும் பொருட்டு, 11 வினாக்கள் கொண்ட வினாடிப்பட்டியல் ஒன்று தயாரித்து, அதன் மூலம் உரிய தகவல்களை சேகரித்தோம்.  பின்பு மக்களிடம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரடியாக உற்றுநோக்கி தேவையான தகவல்களை எடுத்துக் கொண்டோம். மேலும் ஆய்விற்கான ஆதாரங்களை புகைப்படம் எடுத்து சேகரித்தோம்.

ஆய்வின் முடிவில், முற்காலத்தில் இருந்த 6 ஏரிகளும் தற்போதும் உள்ளது என்றாலும், அதில் 2 ஏரிகள் தற்போது பராமரிப்பின்றி இருப்பது தெரியவந்துள்ளது.  குளங்களில் முற்காலத்தில் இருந்த 10 எண்ணிக்கையில் இருந்து தற்போது 6 ஆக குறைந்து 4 குளங்கள் முற்றிலும் அழிந்துவிட்டது என்பதை உணர வைத்தது. அதிலும் தற்போது உள்ள 6 குளங்களில் 2 குளங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளது.  குட்டைகளை பார்க்கும் போது முற்காலத்தில் அதிகப்படியாக 14 இருந்துள்ளது.  இன்றைய நிலையில் 9 குட்டைகள் அழிந்து, மீதமுள்ள 5 குட்டைகளும் அழிந்து வரும் நிலையில் உள்ளது.  

முற்காலத்தில் நீர்நிலைகளால் மக்கள், தனது அன்றாட வாழ்க்கையில் குடிக்கவும், துணி துவைக்கவும், வீட்டின் இதர பயன்பாட்டிற்கும், வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதற்கும், சிறுதொழில்களான பானை செய்தல், அப்பளத்தொழில், நெசவு மற்றும் செங்கல் சூளை போன்றவற்றிற்கும் நீரினை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.  ஏரிகளில் ஆண்டுதோறும் பருவ மழைகளால் நிரம்பி வரும் நீரைக்கொண்டு வேளாண் தொழில் 100 சதவிகிதம் சிறப்பாய் மேற்கொண்டனர்.   

மேலும் நீர்நிலைகள் முற்காலத்தை காட்டிலும் தற்போது வெகுவாக குறைந்துள்ளது கண்கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் இருக்கும் நீர்நிலைகளில் சிலது அழிந்து வருவதும் தெரிகிறது.  இதற்கு உரிய காரணத்தை தேடிப் பார்த்ததில், மக்கள் வேண்டாத கழிவுகளாக கருதப்படும் பொருட்களை, குப்பை-கூளங்களை நீர்;களின் கரையிலும், நீரைகளுக்குள்ளும் போடப்படுவது அறிந்தோம்.  அதேபோல் இறந்தவர்கள் உபயோகித்த பொருட்களை நீர்;நிலைகளில் போடுவதையே சில சமூகங்கள் வழக்கமாக கொண்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊர் பொதுமக்களே, தங்கள் பகுதிக்கு உட்பட்ட நீர்;நிலைகளை வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை தூர்வாரி, பராமரிப்பதும், மழைகாலங்களில் இயற்கை அளிக்கும் கொடையான மழைநீரை நீர்நிலைகளில் கொண்டு சேர்க்கும் விதத்தில் கால்வாய் அமைத்து பராமரிப்பதும் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அத்தைகைய வழக்கத்தை கைவிட்டுவிட்டனர். தற்போது உற்றுநோக்கியதில் நீர்நிலைகளுக்குள் நெல் ஆலைகளும், சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறைவான நீர்நிலைகளாலும், பராமரிப்பின்றி கிடக்கும் நீர்நிலைகளாலும் மக்கள் தனது அன்றாட பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு இடஞ்சல்களை சந்திக்கின்றனர்.  குறிப்பாக முற்காலத்தில் 40 சதவிகிதம் விவசாயத்தை நம்பி இருந்த மக்கள், தற்போது 15 சதவிகிதமே விவசாயம் செய்கின்றனர்.  சிறுதொழில்கள் செய்வோர் 30 சதவிகிதத்தில் இருந்து         5 சதவிகிதமாக குறைந்துள்ளது. குடிநீருக்கு 100 சதவிகிதமும் நீர்நிலைகளை நம்பி இருந்த மக்கள் தற்போது 70 சதவிகிதம் மட்டுமே நீர்நிலைகளில் குடிநீர் பெறுகின்றனர்.  மீதமுள்ள 30 சதவிகிதம் பேர் பணம் கொடுத்து வாட்டர்கேன் மூலம் குடிநீர்; பெறுகின்றனர்.

ஆய்வின் தீர்வாக பார்க்கும்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், நீர்நிலைகளில் குப்பைகள், வேண்டாத இதர கழிவுகள், அடர்ந்த செடி-கொடிகள் என ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, பராமரிப்பு இன்றி பெருமளவு அழிந்து வருகிறது.  சிலது முற்றிலும் அழிந்துவிட்டது.  இதனால் தண்ணீர் தட்டுபாடு மேலும் அதிகரிப்பது என்பது உறுதி.

மேற்படி ஆய்வின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, நீர்நிலைகளின் பராமரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து எங்கள் குழு சில ஆலோசனைகளை துண்டு பிரசுரம் மூலம் மக்களிடம் வழங்கி, விளக்கமளித்து விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.  மேலும் பொது இடங்கள் மற்றும் மாணவச் செல்வங்களிடையே நீர்நிலைகள் குறித்து கருத்துரைகள் வழங்கியும், போட்டிகள் வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என காத்திருக்கிறோம்.

ஆய்வினை தொடர்ந்து, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்.  அதன் மூலம் நீர்நிலைகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறதா? எத்தனை நீர்நிலைகள் தூர் வாரப்பட்டுள்ளது? வருங்காலத்தில் நீர்;நிலைகள் பராமரிப்பிற்கு ஏதேனும் பணிகள் அதில் திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை உள்ளடக்கி இந்த ஆய்வினை தொடங்கியுள்ளோம்.  இதன் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் நீர்நிலைகளை பராமரிக்க எவ்வாறு செயல்பட முடியும் என்பதை அறியவே இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.

அதன்விளைவாக இதுவரை கிடைத்த தகவல்படி இத்திட்டத்தில் பணியாளர்கள் அதிகப்படியாக நீர்நிலைகள் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதும், எந்தவொரு நீர்நிலையிலும் உரிய பணி முழுமை பெறாமல் வெவ்வேறு நீர்நிலைகள் என மாறி மாறி கடமைக்காக குறிப்பிட்ட நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணி
யாற்றுவதும் தெரியவருகிறது.

நாள் : 5-Nov-15, 7:57 pm

மேலே