எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குடிநீர் - உபரிநீர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில்...

குடிநீர் - உபரிநீர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து, கூடுதலாக உபரிநீர் வெளியேற்றும் நடவடிக்கையை, பொதுப்பணி துறை துவங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும், வேகமாக நிரம்பி வருகின்றன; ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., தற்போது, இவற்றில், 8.7 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. புழல் தவிர மற்ற ஏரிகளில் இருந்து, உபரிநீர் வெளியேற்றும் நடவடிக்கையை, பொதுப்பணித் துறையினர் நேற்று முன்தினம் துவங்கினர்.இன்று முதல், மூன்று ஏரிகளில் இருந்தும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான, 3.3 டி.எம்.சி.,யில் , 2 டி.எம்.சி., நிரம்பியது.

*ஏரிகளின் உபரிநீர் திறப்பு நிலவரம்:

*சோழவரம் ஏரி
மொத்த கொள்ளளவு- - 0.88 டி.எம்.சி.,
தற்போதைய நீர் இருப்பு- - 0.69 டி.எம்.சி.,
நீர் வரத்து - வினாடிக்கு,- 1,414 கன அடி
நீர் திறப்பு - நேற்று - வினாடிக்கு, 100 கனஅடி
நீர் திறப்பு - இன்று - வினாடிக்கு, 500 கன அடி

*பூண்டி ஏரி
மொத்த கொள்ளளவு- - 3.23 டி.எம்.சி.,
தற்போதைய நீர் இருப்பு- - 2.82 டி.எம்.சி.,
நீர் வரத்து - வினாடிக்கு, 28,012 கன அடி
நீர் திறப்பு - நேற்று - வினாடிக்கு, 1,960 கன அடி
நீர் திறப்பு - இன்று - வினாடிக்கு, 18,996 கன அடி

*செம்பரம்பாக்கம் ஏரி
மொத்த கொள்ளளவு- - 3.64 டி.எம்.சி.,
தற்போதைய நீர் இருப்பு -- 3.19 டி.எம்.சி.,
நீர் வரத்து - வினாடிக்கு,- 12,031 கன அடி
நீர் திறப்பு - நேற்று - வினாடிக்கு, 1,000 கன அடி
நீர் திறப்பு -இன்று - வினாடிக்கு, 18,000 கன அடி

நன்றி: தினமலர்
----------------------------------------------------

1) உபரிநீர் சேமிப்பு திட்டம் செயல் படுத்தாமல் விட்டது மற்றும்
2) மழை நீர் வடிகால் சரியாக பராமரிக்க இயலாமை
இவைகளுக்கு யார் பொருப்பு?

நாள் : 17-Nov-15, 9:30 pm

மேலே