எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

-----இடுக்கண் களைவோம் ---- கரை புரண்டு ஓடும் தண்ணீர்...

                   -----இடுக்கண் களைவோம் ----

கரை புரண்டு ஓடும் தண்ணீர் வெள்ளத்தினும் சால மிகுத்து 
பெருக்கெடுத்து ஓடுகிறது மக்களின் கண்ணீர் வெள்ளம் .
நிர்கதியாய் நிற்கும் இவர்களுக்கு நிஜக் கரம் நீட்டுவோம் .

உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களையும் 
வள்ளுவரின் ஆதரிசம் எல்லாம் உண்மை வடிவம் பெற வேண்டிய 
தருணம் இதுதான் . 

வயிற்றிற்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் 
என்று ஏழைகளுக்காகத்தான்  பாடினான் பாரதி.
இத் தருணத்தில் அது எல்லோருக்குமே தேவை .

புற நானூற்று கவிஞன் பாடினான் 

உண்டாலம்ம இவ்வுலகம் 
தமக்கென வாழா நோன்றாள் 
பிறர்க்கென வாழுநர் உன்மையானே... 

---இவ்வரிகளில் இத்தருணத்தில்    நாமும்  சிறிது வாழ்ந்து பார்ப்போம் .

பாதிக்கப்பட்ட இடங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு  உதவும் 
அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 
---அன்புடன், கவின் சாரலன்   

நாள் : 5-Dec-15, 9:49 am

மேலே