எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனு நீதி சோழன் எங்கே நீதித் துறையே ......

மனு நீதி சோழன் எங்கே நீதித் துறையே ...
தாமிரபரணியிலிருந்து குளிர்பான ஆலைக்கு தண்ணீர் வினியோகிக்க தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை:பெப்சி நிறுவனம் பெயரில் குளிபானம் தயாரிக்க, தாமிரபரணி ஆற்று நீரை வினியோகிக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.முன்னாள் எம்.எல்.ஏ.,அப்பாவு தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர், விவசாயம், தொழில் தேவைக்கு தாமிரபரணி ஆற்று நீரை நம்பியுள்ளனர். 
கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.திருநெல்வேலி சிப்காட்டில் 31.54 ஏக்கர் நிலம் 'கோகோ கோலா' நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தாமிரபரணியிலிருந்து 1000 லிட்டர் தண்ணீர் 
எடுக்க ரூ.37.50 காசு அரசு கட்டணம் வசூலிக்கிறது.தமிழக அரசு 36 ஏக்கர் நிலத்தை 'பிரதிஸ்தா பிசினஸ் சொலியூஷன்'நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளது. அந்நிறுவனம் மூலம் 'பெப்சி சாப்ட் டிரிங் சொலியூஷன்' நிறுவனம் பெயரில் குளிர்பானம், மினரல் வாட்டர் தயாரிக்க உள்ளனர். ஒவ்வொரு 1000 லிட்டரையும் ரூ.37.50 காசுக்கு விற்பனை செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நிறுவனம் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதை அனுமதித்தால் விவசாயம் பாதிக்கப்படும். திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.
'பெப்சி சாப்ட் டிரிங் சொலியூஷன்' நிறுவனம் பெயரில் குளிர்பானம், மினரல் வாட்டர் தயாரிக்க தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வினியோகிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அப்பாவு மனு செய்திருந்தார்.நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு தமிழக அரசின் தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை செயலர், திருநெல்வேலி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜன.,5 க்கு ஒத்திவைத்தது. மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.மீனாட்சி சுந்தரம் ஆஜரானார்    

                                                                                             ~ தினமலர் நாளிதழ் 16.12.2015


குறிப்பு :
அரசாங்கம் தான் எங்களை ஏறி மிதிக்கிறது என்றால் ...
நீதி துறை யாருக்கும் வளைந்து நெளிந்து போக வேண்டிய அவசியம் அரசியல் அமைப்பில் இல்லையே ...
இருந்தும் ஏன் நல்ல வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்கிறீர்கள் ...
இரண்டு நாளுக்கு முன்பு கூட "மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு மது விலக்கு   அமல்  படுத்த கோரி வந்த வழக்கு  தள்ளுபடி " இதற்கே  அந்த வழக்கு நிரந்தர மது விலக்கு கேட்கவில்லை வெள்ளத்தில் இருந்து  மீண்டு   வாழ்வாதாரத்தை     தேடிக்கொள்வதற்காக 
தற்காலிக   மது விலக்கு தான் கோரப்பட்டது ...
உண்மையில்    நீதி உங்களிடம் இருக்கும் என்றால் தமிழகம் முழுக்க நிரந்தர மது விலக்கை தரவேண்டாமா ...

நீதி கேட்டு  சென்ற மனு நீதி சோழன்  மண்ணில் மறக்க முடியா தள்ளுபடிகள் ...

நாள் : 16-Dec-15, 8:58 am

மேலே