எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோ+வில்=கோவில் "கோ" என்பது ஒரு உயர்ந்த அல்லது இறைவன்...

கோ+வில்=கோவில் 
"கோ" என்பது ஒரு உயர்ந்த அல்லது இறைவன் அல்லது  தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் ஒரு இடம்  அல்லது மற்றவைகளில் இருந்து வேறுபட்ட ஒன்று என பல அர்த்தங்கள் உள்ளது.
"வில்" என்பது இல்லத்தை  குறிக்கிறது. ஆகா கோவில் என்பது அரசன் வாழ்ந்த இடம்  அல்லது அரசனின் இல்லம் என  கூறலாம்.
கோ என்ற தமிழ் சொல் வேறு வார்த்தைகளோடு இணைத்து தரும் அர்த்தங்களை முதலில் காண்போம்.
1. கோ+மான் = கோமான்  - உயர்ந்த ஒருவன் 
அரசன் மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஒரு நபர் .அதாவது மற்றவர்களை விட மேலானவன் .
2. கோ+அரி  = கோடரி- மேலே உயர்த்தி அரிதல்  
கோடரியை மரத்தை வெட்டும்பொழுது மேலே உயர்த்தி வெட்டுகிறோம்.
3. கோள் = கிரகம் - வானத்தில் தொலைவில்/உயர்ந்த இடத்தில்  இருக்கும் ஒன்று.
4. கோல் = ஆட்சி செய்யும் அதிகாரம்  உள்ளவன். அதாவது குடிமக்களை விட மேலானவன் என்ற பொருள்.
5. கோடி = ஒரு பெரிய தொகை.

ஆக, கோ என்பது உயர்ந்த ஒன்றை குறிக்கும் சொல்லாக அமைந்துள்ளது.

கோவில்கள் கட்டப்பட்டவிதம்:

கோவிலை சுற்றி மண்டபங்கள், குளம், பல சன்னதிகள், பெரிய நுழைவாயில், பெரிய மதில் சுவர்கள்  மற்றும் சுரங்கப்பாதை  உள்ளது.
இவற்றில் பெரிய மதில் சுவர்களும், சுரங்கப்பாதைகளும் கோவிலுக்கு எதற்க்கு? என ஆராய்ந்து பார்த்தால் மதில் சுவர்கலும் பெரியக் கதவுகளும் எதிரி நாட்டு மன்னன் போரிட வந்தால் எளிதில் நுழைந்து விட கூடாது என்பதற்காக கட்டப்பட்டுள்ளது என்பது புரியும். 
மேலும் கர்ப்பகிரகத்தை சுற்றி இருக்கும் மண்டபம் அந்த காலத்தில் வியாபாரம் செய்ய அல்லது எதிரி நாட்டினர் தாக்க வந்தால் அலல்து இயற்க்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டால்  நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க கட்டப்பட்டிருக்கலாம். 
சுரங்கப்பாதைகள் எதிரி நாட்டினர் நுழைந்து விட்டால் அரச குடும்பத்தினர், வீரர்கள்  மற்றும் நாட்டின் குடிமக்கள் தப்பிவிட அமைக்கப்பட்டிருக்கலாம். இவைகளை கொண்டு உற்றுநோக்கினால் கோவில்கள்  இறைவனை வழிபடும் இடம் மட்டும் அல்ல அது அரசன் வாழ்ந்த இடமாகவும் இருக்கலாம். அப்படி பார்த்தால் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றும் இருக்கிறது!!!




(இந்த செய்தியை கவிஞன் பதிப்பகம் என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டு பகிர்கிறேன்....)

நன்றி
இப்படிக்கு,
திருமூர்த்தி

நாள் : 31-Dec-15, 1:50 pm

மேலே