எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானவில்லுக்கு வர்ணம் எட்டு..2 உன் பார்வைச் சூரியன் படாத...

வானவில்லுக்கு வர்ணம் எட்டு..2

உன் பார்வைச் சூரியன் படாத
பொழுதில் பனியாக உறைகிறேன்
உன் வேர்வைச் சூரியன்
தொட்டதும் நதியாக ஓடுகிறேன்.

ஓரிரவா ஓர் பகலா உனைநினைத்தே
உன்மத்தம் ஆகிறேன்
ஒவ்வொரு பிறப்பிலும் இது போலே
உனைதொடர யாசிக்கிறேன்.

நீ சிரித்தால்
செங்கமலம் பூ பூக்கும்
சிள்வண்டுகளும் உன்னிடம்தான்
பாடம் படிக்கும்

நீதானே செந்தாமரை
பூவுக்கு உதாரணம்
நினக்கு முன்னே
பூப்பதெல்லாம் சாதாரணம் .

இரவிலும் வியர்க்குது
இதுயென்ன விந்தை
இறுக்கி அணைத்திட
இனித்திடும் சிந்தை

தாவுது தாவுது
மனமொரு குரங்காக
தடை மேடுகள் ஏராளம்
தளிர்க்கரங்கள் தடையாக

பாட்டுப்பாடி தென்றல் வந்து
காதில் என்ன சொல்லியதோ
பச்சைக் கிளிகள் இரண்டுக்கும்
பள்ளியறைப் பாடமதுவோ

முகத்திரை விலக்கி
முகமது கொஞ்சம் காட்டு
மறைத்து வைத்த
புதையலை திறந்து  பூட்டு

அன்பைச் சொல்லி ஆணையிடு
அகிலம் வெல்கிறேன்
அன்பே நீயும் வந்து நில்லு
ஆழியைத் தடுக்கிறேன்

கனவில் வந்து கொல்கிறாய்
நனவில் வந்து வெல்கிறாய்
நாணல் பெண்ணோ நீஎன்றால்
நாணவும் கொஞ்சம் செய்கிறாய்

கனைக்கும் குதிரை நானடி
சீக்கிரம் களைத்துப் போவேண்டி
ஆமை திரும்ப நேரமாகும்
அது யாரோ அல்ல நீயே தாண்டி

ஆலம்பாடி அரங்கம் பாடி
தரங்கம்பாடி ஆடிப்பாடி
வரும்போது -உன்
அங்கெமெல்லாம் தங்கம் தாண்டி

ஆனைப்பாகன் நானடியே
அங்குசம் கொண்டு வந்தேண்டி
அடியே எங்கு தொட வேண்டும்
அதையும் நீயே சொல்லேண்டி.

தொடரும்......

சுசீந்திரன்.

நாள் : 31-Dec-15, 1:59 pm

மேலே