எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதுமைப் பொங்கல் பொங்கிடுவோம் பாவலர் கருமலைத்தமிழாழன் பொங்கிடுவோம் பொங்கிடுவோம்...

புதுமைப் பொங்கல்   பொங்கிடுவோம்

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 பொங்கிடுவோம்   பொங்கிடுவோம்
புதுமைப்பொங்கல்  பொங்கிடுவோம்          

 பாபருக்கும்    இராமருக்கும்                     
  பகைமையினை  நீக்கியே          
 தூபமிடும்     மதவெறியைத்                     
  துரத்தித்தூர  விரட்டியே        -பொங்          

 இலஞ்சத்தை   ஊழலினை                      
 இல்லையென  ஓட்டியே          
 நலதிட்ட   பலன்களெல்லாம்                      
 நலிந்தோர்கள்    கைசேர்த்தே     -பொங்           

 சாதிவெறி   வன்முறையைச்                      
 சாய்த்துமனம்    ஒன்றாக்கியே          
நீதிநெறி   நேர்மையிலே                      
 நிலைத்தநல   வாழ்வாக்கியே       -பொங்           

 சொல்லின்றி    உழைப்பினிலே                      
 செழிக்கின்ற  வளமாக்கியே          
 நல்வழியில்   அறிவியலால்                      
 நாட்டுநிலை  உயர்வாக்கியே     -பொங்           

 செங்கரும்பு    கதலியொடு                      
 செந்நெல்லின்  மணிகுவித்து           
மங்கலமாய்   மஞ்சளெழில்                      
 மனையெல்லாம்  திகழவைத்தே        -பொங்

 அன்பென்னும்    தோரணத்தால்                       
அகமெல்லாம்  அழகுசெய்து
முன்நின்று   அனைவரையும்                     
 முகம்மலர்ந்து   வரவேற்றே           --பொங் 

நாள் : 12-Jan-16, 6:33 pm

மேலே