எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அந்தமான் அழகை ரசிக்க ஆனந்தமாய் நானும் சென்றேன் !இயற்கையின்...

அந்தமான் அழகை ரசிக்க ஆனந்தமாய் நானும்  சென்றேன் !இயற்கையின் வாசத்திலேஇதயமும் நனைந்திடவே ! சென்று வரலாம்'செல்லுலார் செல்' எனும்போது;கூட்டத்தோடு நானும் சென்றேன்குதூகலமா ! கண்டுவிட்டேன் செல்லுலாறை ;நின்றுவிட்டேன் கண்கலங்கி !மரண ஓலம் நெஞ்சை உலுக்க ;மகத்தான தலைவரெல்லாம்;கண்முன்னே  கலங்கலாக ! கொட்டடி சிறை கூட;கொட்டுதடா கோபக்கனையை !  விடுதலை ஒன்றை மட்டும்விரும்பி ஏற்றதனால் !உணவு, உடை,உறவு மறந்து ;வாழ்ந்ததெல்லாம் வாசமில்லா சிறைதனிலே !  இந்தியாவின் விடுதலைக்கு ;இழந்த உயிர்கள்  ஏராளம் !இழப்புகள் தந்த வலியும் ;இதயத்திலே ஈட்டியாக ! நித்தம் நித்தம் கலங்குகிறேன் !நித்திரையும் தொலைக்கின்றேன் !இழந்ததெல்லாம் என் சொந்தம் !இயல்புக்கும் வரவில்லை !

நாள் : 8-Feb-16, 10:00 am

மேலே