எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகாக இருக்க 12 வழிகள் !! 1. யாருடனும்...

அழகாக இருக்க 12 வழிகள் !!

1. யாருடனும் ஒப்பிடாதீர்கள்,நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை.
ஒவ்வருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வருவருக்குள்ளும் கொஞ்சம் தாழ்வு 
மனப்பான்மை,பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் 
எந்த பயனும் இல்லை ..

2. உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள்.அன்பாக இருக்க 
கற்றுக்கொள்ளுங்கள்.அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள்
உங்கள் முகத்துக்கு அழகைத்தரும் ..

3. உங்களை சுற்றி வசீகர அலைகளைப் பரப்ப வேண்டுமா ?சிரியுங்கள் .உங்கள்
நண்பர்களுடன் இருக்கும் போது உங்கள் சிரித்த முகல் அவர்களை உங்கள் பக்கம் திருப்பும் ..
உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும் ,உங்களை வசீகரமானவர்களாக 
மாற்றும்

4. உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளுங்கள்.உடல் சுகாதாரமாக இருந்தால் தான் உற்சாகமாக இருக்க முடியும்.உடலில் பொங்கும் வலிமையையும் ,சக்தியும் உங்களை சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்க வைக்கும். சொர்விலாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் ..

5. உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.அது உங்கள் குளுவிளுருந்து உங்களை தனித்து காட்டும்.பாட்டு,டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக 
இருப்பதை பார்க்கிறோம் , முகம் அழகானவர்கழி விட திறமைசாலிகள் கொடிகட்டி பறப்பதை நாம் காண்கிறோம் அல்லவா ..

6. உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துகொண்டீர்கள் .அது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு தெரியவேண்டுமே !! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களை 
சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம்.உங்கள் அறிவு , திறமையை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதை கண்டிருபீர்கள்...

7. நோகடிக்கும் , பிறரை குறை சொல்லும் பழக்கத்தை அறவே தவிருங்கள் . எல்லோரிடமும் 
குரஈருக்கும் .இதை பெரிது படுத்தாதீர்கள் . பெருந்தன்மையாக பாராட்டிப்பேசும் 
உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்கும்..

8. உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களை கண்டுகொள்ளாதீர்கள் .திறம்பட
செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களை தனித்தன்மையுடன் காட்டும் ..

9. உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவ நம்பிக்கை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த
செயல்பாட்டையும் அது தடுத்துவிடும் .. தள்ளிபோடும் .முடங்கிப்போய் இருப்பவர்கள் 
அழகாக காட்சியளிக்க முடியாது ..

10. பொறாமையை விட்டு தள்ளுங்கள்.பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றை 
பார்த்து பொறாமை படுவதை விட உங்கள் வாழ்வை ,செயல்களை திருப்ப்திகரமாக 
செய்து பாருங்கள் . உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகபோளிவை கூட்டும் ..

11. உங்களுக்கே உங்களை பிடிக்காமல் இருக்கலாம்.. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத 
பட்டியல் நிறைய இருக்கும் . அதையெல்லாம் புறந்தள்ளுங்கள்.உங்கள் முக அமைப்பையோ 
நிறத்தை ,உயரத்தை பற்றி படும் கவலைகளை விட்டோளியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும் ..

12. குறைந்த அளவான மேக்கப் , பற்களை சுத்தமாக வைத்துகொள்ளுதல் , நகங்கள் ,
பாதங்களை சீராக வைத்துகொள்ளுதல்,உடையில் கவனமாக இருத்தல் , உடலில் மெல்லிய 
நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும் .. 

இதைதான் பெரியவர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொன்னதற்கு அர்த்தம் ..

(படித்ததில் பிடித்தது)

நாள் : 14-Feb-16, 7:49 pm

மேலே