எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவலைகள்: ‘தும்பி வா’ தந்த ஓ.என்.வி. குரூப் ஆதி...

நினைவலைகள்: ‘தும்பி வா’ தந்த ஓ.என்.வி. குரூப்

ஆதி வள்ளியப்பன் 

மலையாளம் - தெரியாதுஓ.என்.வி. குரூப் - தெரியாதுபாலுமகேந்திராவின் ‘ஓளங்கள்’ - தெரியாதுஇத்தனை தெரியாதுகள் இருந்தும், இந்த மூன்றும் தொடர்புடைய ‘தும்பி வா’ என்ற மலையாளத் திரைப்படப் பாடல் எங்கள் வீட்டில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும். என் மகனுக்கு இரவில் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களில் ‘தும்பி வா’ முதன்மை இடம் பிடித்த ஒன்று.பாலுமகேந்திரா எடுத்த மலையாளப் படமான ‘ஓளங்க’ளில் (அலைகள்) இடம்பெற்றுப் பெரும் பிரபலமடைந்தது இந்தப் பாடல். இசை இளையராஜா, எழுதியவர் ஓ.என்.வி. குரூப். மலையாளக் கவிதையுலகில் புகழ்பெற்றிருந்தவரான, ஞானபீட விருது பெற்ற குரூப், பிரபலமான பல திரைப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். மலையாள இலக்கிய உலகில் புகழ்பெற்றிருந்தவர்கள் சினிமாவுக்கான கதை, திரைக்கதைகளை எழுதியதைப் போலவே திரைப்பாடல் எழுதும் நீண்ட பாரம்பரியமும் சேர மண்ணில் இருக்கிறது.30 ஆண்டு புகழ்இளையராஜாவின் புகழ்பெற்ற மெட்டுகளில் ஒன்றைக் கொண்டது ‘தும்பி வா’ பாடலின் மெட்டு. இந்தப் பாடல் வெளியான அதே ஆண்டு தமிழில் வெளியான ‘ஆட்டோ ராஜா’ என்ற விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும், அதே ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘நிரீக்ஷனா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆகாசம்’ பாடலும் ஒரே மெட்டுதான்.இளையராஜாவின் புகழ்பெற்ற பழைய மெட்டுகளைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தும் இந்திப்பட இயக்குநரும் தமிழருமான பால்கி, அமிதாப்பச்சன் நடித்த ‘பா‘ படத்தில் இதே மெட்டைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இளையராஜா இசையமைத்துத் தந்த பாடல்தான் ‘கும் சும் கும்’. 30 ஆண்டுகள் கழித்து இந்தியில் பயன்படுத்தப்பட்டபோதும், அந்த மெட்டு தன் புகழைப் புதுப்பித்துக்கொண்டது.சிக்கலின் தொடக்கம்‘தும்பி வா’ அழகிய கதை போன்றதொரு பாடல். ‘ஓளங்கள்’ படத்தின் சிக்கலான முடிச்சின் தொடக்கப் புள்ளியாக இந்தப் பாடல் இடம்பெறும். திருமணத்துக்கு முன்பே தனக்கு இருந்த உறவில் பிறந்த பையனை, தன் மனைவிக்குத் தெரிவிக்காமல் குடும்பத்துக்குள் சில நாட்களுக்கு அழைத்து வருகிறான் நாயகன். நாயகனுக்கும் அவன் மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை இருப்பாள். இவர்கள் நால்வரும் ஒரே குடும்பமாகப் பூங்காவுக்குச் செல்வது, வீட்டில் குதூகலமாக இருப்பது என்ற பின்னணியில்தான் இப்பாடல் வரும்.தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அஞ்சு மகனாகவும், பூர்ணிமா பாக்யராஜ் அம்மாவாகவும் தோன்றுவார்கள். குழந்தைகளுக்கான குதூகலத்துடன் சற்றே அதீதக் கற்பனை கலந்த ஒரு கதை போல இந்தப் பாடல் விரியும். குதூகலமும் மழலையும் ஒரு கோட்டில் சந்திக்கும் அபூர்வத்தன்மையுடன் எஸ். ஜானகி பாடலைப் பாடியிருப்பார். இதோ ‘தும்பி வா’ பாட்டின் தமிழ் வடிவம்:தட்டான்பூச்சியே வா, தும்பை பூவின் இதழ் நுனியில் ஒரு ஊஞ்சலைக் கட்டுவோம்.அந்த ஊஞ்சல் ஆடும் வேகத்தைக்கொண்டு ஆகாயப் பொன் ஆல மரத்தின்இலைகளைப் போய்த் தொட்டு வருவோம்.மந்திரத்தால் உருவாகிப் பாயும் குதிரையை மாணிக்கக் கையால் தொடுவோம்.கந்தர்வன் பாடும் ஆலயத்தினுள்ளே கற்பக விருட்சப் பூக்கள் தரும் நிழலில், ஊஞ்சலே நாம் பாடுவோமா?வானத்தில் நிலா மாமனிடம் சாப்பிடப் போவோமா?அந்தக் காலப் பாட்டின் வரிகள் இதழிலே தேன்துளியாய் இனிக்கின்றன.கற்கண்டு குன்றின் மேலே காக்கை திரியும் நிழலில், ஊஞ்சலே நீ பாட வாஇந்தக் கையிலும் அந்தக் கையிலும் கசக்காத ஒரு பிடி நெல்லிக்காய் மணிகளைத் தா.(நன்றி: எழுத்தாளர் யூமா. வாசுகி)கொள்ளை கொள்ளும் பாடல்‘தும்பி வா’ பாடல் காட்சிகுழந்தைகளை வசீகரிக்கக்கூடிய ராஜாவின் மெட்டுகளில் இதுவும் ஒன்று. அதைச் சரியாக உள்வாங்கிக்கொண்ட கவிஞர் குரூப், குழந்தைகள் அதிகம் விரும்பும் கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒரு பாடலை வடித்திருக்கிறார். இந்த இரண்டையும் சரியாகப் புரிந்துகொண்ட இயக்குநர்-ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா, அதற்குரிய காட்சிகளை இயல்பாகக் காட்டியிருப்பார். இப்படி அனைத்து அம்சங்களும் சரியாகக் கூடிவந்த அற்புதமான ரசவாதம் சாத்தியமான பாடல்களில் இதுவும் ஒன்று.யூ டியூபில் கிடைக்கும் அடிப்படைத் தரத்திலான காட்சித் துணுக்கிலேயே இதை உணர்ந்துகொள்ள முடியும். இப்படியாக மலையாளக் கரையோரம் காலங்களைக் கடந்த பாடலாகப் பெயர்பெற்ற ‘தும்பி வா’, எல்லை கடந்து நம்மையும் கொள்ளை கொண்டுவிட்டது.பாலுமகேந்திராவின் பிரியம்‘தும்பி வா’ பாடலுக்கான மெட்டு ‘மூன்றாம் பிறை’ படத்தின் பின்னணி இசைத்துணுக்கை அடிப்படையாகக் கொண்டது என்றும், அந்த இசைத்துணுக்கின் அடிப்படையிலேயே ‘தும்பி வா’ பாடலை ராஜாவிடம் பாலுமகேந்திரா கேட்டுப் பெற்றார் என்றும் ஒரு தகவல் உண்டு.பாலுமகேந்திரா இளையராஜா கூட்டணி பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டது. இந்த இணையின் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் அமரத்துவத்துடன் உள்ளன. அந்தப் பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தது என்று பாலுமகேந்திரா சொன்னது ‘தும்பி வா‘ பாடலைத்தான். அந்தக் காரணத்தினாலோ என்னவோ, பல மொழிகளில் அவர் இயக்கிய வெவ்வேறு படங்களில் இந்த மெட்டை மூன்று முறை கேட்டு வாங்கிப் பயன்படுத்தியுள்ளார்: மலையாளத்தில் ‘ஓளங்கள்’, தெலுங்கில் ‘நிரீக்ஷனா’, இந்தியில் ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’.இளையராஜாவின் மெட்டுகளிலேயே, பல மொழிகளில் அதிக முறை பயன்படுத்த மெட்டு இதுவாகத்தான் இருக்கும். காப்பி ராகத்தில் அமைந்த இந்த மெட்டுதான், இளையராஜாவுக்கும் தன் இசையில் மிகவும் பிடித்த மெட்டுகளில் ஒன்று என்றும் கேள்வி. சமீபத்தில் மறைந்த ஓ.என்.வி. குரூப்புக்கு ‘தும்பி வா’ பாடலை மீண்டும் ஒரு முறை பாடுவதைவிட மிகச் சிறந்த அஞ்சலி வேறென்ன இருக்க முடியும்?ஓ.என்.வி. குரூப்

நாள் : 20-Feb-16, 1:36 am

மேலே