எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொய் சொல்லும் பொக்கிஷங்கள்! உலகில் அதிகமாக பொய் சொல்பவர்கள்...

பொய் சொல்லும் பொக்கிஷங்கள்! 


உலகில் அதிகமாக பொய் சொல்பவர்கள் யார் தெரியுமா?
நம் அம்மாக்கள் தான். அவர்கள் பொய் சொல்வதே 
நமக்காக தான். சிறு வயதில் நமக்கு உணவூட்ட எத்தனையோ பொய்களை சொல்லி இருக்குறார்கள். நாம் வெளியே சென்று விடக்கூடாதென்று நிறையவே பொய் கதைகளை சொல்லியதுண்டு. அதுமட்டுமல்ல நாம் தவறு செய்தும் அப்பா அடிப்பார் என பயந்து அப்பா விடம் பொய் சொல்லி மாட்டியதுண்டு. 
இன்னொரு விடயம் தெரியுமா...
இருக்குற உணவு குறைவு என்றால் எனக்கு பசிக்கவில்லை நீ சாப்பிடு என்று பொய் சொல்லி தன் வயிற்றை ஏமாற்றி நம்மை பொய் சொல்லி நம்ப வைத்து சாப்பிட வைக்கின்றனர்.

இப்படி நமக்காக பொய் சொல்லி வளர்த்தவர்களை வாலிபர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவதை பார்க்கும் போது ஒவ்வொரு அந்த தாய் பட்ட 
கஷ்டங்கள் சொன்ன பொய்கள் 
எல்லாம் பூச்சியத்தால் பெருக்கப்படுகின்றன...!!!

நாள் : 30-Mar-16, 2:25 pm

மேலே