எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..! மதமும்...

அனைவருக்கும்  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!



Image result for smiling sun stickers  
Image result for smiling flower   Image result for smiling flower   Image result for smiling flower  Image result for smiling flower  



மதமும் இனமும் துறந்தே 
கைகோர்ப்போம் பயணம் இனிதே 
ஒற்றுமையின் தன்மை உணர்ந்தே 
பற்று வைப்போம் பகையும் மறந்தே!!

நல்ல நினைவில் நாளும் 
வாழ்ந்தால் இல்லை தாழ்வே 
இல்லை என்ற சொல்லே - இனி 
இல்லாது சிறக்கும் வாழ்வே!!

நினைத்தவை யாவும் நடக்கும் 
கேட்பவை யாவும் கிடைக்கும் - நாளும் 
துவக்கி வைக்கும் துன்முகி வருடம் 
நலமே தந்து வாழ்க்கையும் புலரும்!!

துன்முகி வருட வரவே 
தருமே எவர்க்கும் நல்வரமே 
வெளிச்சம் வாழ்வில் உதயம் - இனி 
மகிழ்ச்சியிலே துள்ளும் இதயம்!!

                                                                            வாழ்த்துக்களுடன்,
                                                                             சொ. சாந்தி.
Image result for flowers












பதிவு : C. SHANTHI
நாள் : 14-Apr-16, 7:45 am

மேலே