எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சங்க காலம் (Sangam period) என்பது தமிழ் வளர்ந்த காலம்....

சங்க காலம் (Sangam period) என்பது தமிழ் வளர்ந்த காலம். மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் ''தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் சிறப்பான காலம். தென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்கக் காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர். பத்துப் பாட்டு, எட்டுத்தொகை , தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை என தமிழ் நூல்கள் படைக்கப்பட்டு தொகுக்கப்ட்ட சிறப்பான காலம் சங்க காலம்.தமிழின் பெருமை நெடுநாள் கொண்டது என்பது சங்க காலம் காட்டுகிறது

பதிவு : ஷான் ஷான்
நாள் : 17-Apr-16, 12:50 am

மேலே