எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--------------தமிழின் சிறப்பு------- தமிழின் வாழ்வியல் சிந்தனைகள், அறம் ,...

--------------தமிழின் சிறப்பு-------


தமிழின் வாழ்வியல் சிந்தனைகள், அறம் , விருந்தோம்பல் என எல்லோராலும் போற்றப்படும் நிலையில்  இன்றைய அறிவுக்கும், விஞ்ஞானத்துக்கும் சவால் விடும் எத்தனையோ சான்றுகளை விட்டுப்போயிருக்கிறது தமிழ். அவை இன்றும்  நிலைத்திருக்கின்றன, என்றும் நிலைத்திருக்கும். அவற்றில் பெரியகோபுரம், ஆயிரங்கால் மண்டபம், சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்  ஆகியவை மிக முக்கியமானவை. இவற்றையெல்லாம் வெளிநாட்டு அறிவியலார்கள் உளவு வேலை பார்த்தாலும்  அந்த கோபுரங்களில் மறைந்திருக்கும் திறனை அவர்களால் ஒரு சதம் கூட அறியமுடியவில்லை.. இத்தனை அறிவியல் கருவிகள் கொண்டு விண்ணில் இருந்து அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆராயந்தாலும்  அவற்றின் தன்மையை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இவற்றை விட மிக முக்கியமான ஒன்று.  கணிதத்தில்  நம் தமிழ்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்து  ”எண்களில் முன்னோடி: எனப்புகழ் பெற்று நிற்கிறது. எல்லா மொழிக்கும் பெப்பே எனக்காட்டி விட்டு  மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கு எண்கள் பெயர்களை  பட்டியலிட்ட மொழி நம் தமிழ் மொழி.

தமிழரைப்போல் விஞ்ஞானத்திலோ, கணக்கியலிலோ உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை உலக்குக்கு உணர்த்தும் மிகச் சிறந்த படம்.


இதில் ஆங்கிலத்துக்கும் பெப்பே பிற மொழிகளுக்கும் பெப்பே எனும் நிலையில்  
இராமனுஜரின் ”பூஜ்யம்” என்ற கணக்கியலின் ஆரம்பம் தமிழுக்கு கிடைத்த பெருமை.  அதே
போல் ஆங்கிலத்தாலோ, பிற மொழிகளாலோ   நினைத்துப்பார்க்க முடியாத , சொல்லமுடியாத எண்களுக்கு நம் தமிழ் அன்றே சொல்லிவைத்த எண்களின் பெயர் பட்டியல் இதோ. நம்மில் எத்தனையோ பேருக்கு தெரியாத இந்த அரிய பட்டியலைத்தான் இங்கே தங்களின் பார்வைக்காக பதிவுசெய்கிறேன்.



இதே போல் இன்னொரு பட்டியல்.




தொன்மை வாய்ந்த மொழி மட்டுமல்ல. எல்லோரையும் உயர்ந்து பார்க்க வைத்த மொழி தமிழ் மொழி.வாழ்க தமிழ்.

நாள் : 17-Apr-16, 11:39 pm

மேலே